Save 20% off! Join our newsletter and get 20% off right away!

ரப்பர் டியூப்பில் மக்களை மீட்ட பாஜக எம்எல்ஏ காந்தி

மாநிலமே மழை வெள்ளத்தால் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்த வேளை, குமரி மாவட்ட மக்களின் கெத்து எல்லோரையும் திகைக்கச்செய்து விட்டது.

ஓரளவு மழை பெய்தாலே பேரளவு தேங்கிவிடும் குமரியில், இந்த மழை சீசனில் கொட்டோ, கொட்டென்று கொட்ட, வீடுகளை வெள்ளம் முற்றுகையிட்டது. ஆனாலும், பெருவெள்ளம் தெருவில் ஓட, அதில் கன்னியாகுமரி கன்னிகளும் குமரிகளும் நீந்தியும் நீர்ச்சறுக்கு விளையாடியும் குதூகலித்தனர்.

சில இடங்களில்  தண்ணீரில் நீச்சல் போட்டி நடத்தினர். பெண்கள் பொங்கிவந்த மழைநீரில் துணி துவைத்தனர். வீட்டில் தேங்கியுள்ள தண்ணீரில் மீன்களை போட்டு மீன் பிடித்து விளையாடினர்.

இப்படி ‘இந்த வெள்ளமெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி என்று அலட்சியம் செய்தநிலையில், கனமழை கொட்டிய நிலையிலும், தண்ணீருக்கு மேல் ஏணியை போட்டு தன்  வீட்டிற்கு ஒருவர் பெயின்ட் அடித்த வீடியோ வைரலாகியது. இத்தனைக்கும் உப்பனாற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து அவர் வீட்டருகே ஒட்டியது.

ஏற்கனவே நமக்கு தண்ணீரில் கண்டம் இருக்கலாம்.  ஆனால், குமரியே கடல் தண்ணீரிலிருந்து எழுந்த கண்டமல்லவா? அந்த தெனாவெட்டு தான் இப்படியெல்லாம் செய்யச்சொல்கிறது.

இந்தச் சூழ்நிலையிலும், பாஜகவினர் விளையாடிய நீர் விளையாட்டு தான் ஹைலைட். எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி தலைமையில் ரப்பர் டியூப்பில் மக்களை மீட்பதாக சீன் போட்ட பாஜகவினர், அப்படி டியூப் மூலம் மீட்ட ஒருவரை, மீண்டும் வெள்ளத்தில் விட்டுவிட்டு கரையேறியதை கண்டவர்கள், கொளத்தூரில் அண்ணாமலை செய்த மீட்பு பணியையே மறந்துவிட்டனர்.

 காந்தி எம்எல்ஏ