சிவகங்கை மாவட் டத்தில் பசு, எருமை, காளை என 2 லட்சத்து 6 ஆயிரத்து 500 கால்நடைகள் உள்ளன. தொடர் மழையால் தற்போது கால்நடைகளுக்கு காணை நோய் பரவி வருகிறது. இந்நோய் தாக்கப்படும் பசு, கன்றுகளுக்கு வாய், காலில் நுரைபோல் பொங்கி வரும். இவை முற்றி இரையுண்ண முடியாமல் அவை பலியாகின்றன.
இது வரை சிவகங்கை மாவட்டத்தில ஏராளமான கால்நடைகள் காணை நோய்க்கு பலியாகியுள்ளன. காணை நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க 6 மாதத்திற்கு ஒரு முறை 2 மில்லி அளவிற்கு தடுப்பூசி போடப்படும்.சிவகங்கை மாவட்டத்திற்கு தேவையான 2.06 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தை அரசு வினியோகம் செய்யவில்லை. இதனால் காணை நோய் அதிகரித்துள்ளது.
மேலும் இங்குள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 87 உதவி கால்நடை மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். பல ஆண்டாக உதவி கால்நடை டாக்டர்கள் பணியிடத்தை அரசு நிரப்பவில்லை.எனவே, மாவட்ட அளவில் 16 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களால் கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதன் காரணமாக காணை நோய் தாக்குதலுக்கு வெகு வேகமாக கால்நடைகள் பலியாகி வருகின்றன.
இதுவரை 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன விரவில் நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த மாவட்டத்தின் அடித்தட்டு மக்கள் வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் கால்நடை வளர்ப்பு தொழிலே அழிந்துவிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
Leave a Reply