நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் மாறைந்த முரசொலி செல்வத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சி கொடி கம்பங்கள் அரைக்கம்பத்தில் பறக்க விடாமல் உள்ள திமுக நிர்வாகிகள் மீது மூத்த நிர்வாகிகள் குற்றச்சாட்டு.
முத்தமிழ் கலைஞர் அவர்களின் மருமகனும் அரசியல் மேதை முரசொலி மாறன் அவர்களின் சகோதரருமான தலைசிறந்த எழுத்தாளர் பத்திரிக்கையாளருமான முரசொலி செல்வம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் கட்சிக் கொடிக்கம்பங்கள் அரைக்கம்பத்தில் பறக்க விட தலைமை கழகம் அறிவிப்பை வெளியிட்டது.
10-ம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு கட்சிக் கொடிக்கம்பங்கள் அரைக்கம்பத்தில் பறக்க விட்டு முரசொலி செல்வன் அவர்கள் மறைவினை ஒட்டி தமிழக முழுவதும் அஞ்சலி செலுத்த வேண்டுமென தலைமைக் கழக பொதுச் செயலாளர் துரைமுகம் முருகன் அறிவிப்பை மதிக்காத ராசிபுரம் திமுகவினர் ராசிபுரம் சுற்றுப்பகுதியில் உள்ள ஒரு கம்பத்தில் கூட அஞ்சலி செலுத்தும் வகையில் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவில்லை என மூத்த நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
– பி.கௌரிசங்கர்
Leave a Reply