இதுவரை அதிமுகவே அலங்கரித்து வந்த கள்ளக்குறிச்சி நகராட்சியை இந்தமுறை திமுக அலங்கரிக்கப்போகிறது என்கின்றனர் ஆளுங்கட்சி உடன்பிறப்புகள்! இருபத்தியோரு வார்டுகளை கொண்ட கள்ளக்குறிச்சி நகராட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினே வந்து ஓட்டு கேட்டாலும் ஜெயிக்க முடியாது என்று அதிமுக நகர செயலாளர் பாபு டென்ஷனை கூட்டுகிறார். கவுன்சிலர் வேட்பாளர்களை தேடிக் கொண்டிருக்கும் பாபுதான் நகரமன்ற தலைவர் வேட்பாளராம் பொருளாதாரத்தில் வலுவாக இருக்கும் பாபுவுக்கு போட்டியாக யாரும் களமிறங்கவில்லை பழைய நினைப்புல பாபு பேசுகிறார் இவர் மட்டும் ஜெயிச்சி எப்படி தலைவராக முடியும்? முதல்ல பாபுவையே ஜெயிக்க விடமாட்டோம் என்கின்றனர் திமுகவினர். வாக்காளர்கள் மத்தியில் பணத்திற்கு மிகப்பெரிய மரியாதையும் வரவேற்பும் இருப்பதால், ஒரு கை பார்த்துவிடலாம் என்று பாபு நினைக்கிறார். ஆனால், அதிமுக நிர்வாகிகளின் ஒத்துழைப்பு ஜீரோவாக இருப்பதால் பாபு ஹீரோவாக முடியாது. இதுதான் நிஜ நிலவலம்.
திமுக தரப்பில்.., எம்எல்ஏவை விட்டுக் கொடுத்திட்டோம் ஆனா நகராட்சியை கனவிலும் விட்டுத் தரமாட்டோம் நடக்கறது எங்க ஆட்சி என்று வேகமாக பேசுகின்றனர். தேமுதிகவிலிருந்து வந்து திமுகவில் நகர செயலாளராக இருக்கும் தொழிலதிபர் சுப்பராயலுதான் தலைவர் வேட்பாளராம் இவருக்கு போட்டியாக யாரும் வரவில்லையே தவிர, வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திமுகவில் பலத்த போட்டி! தேர்தல் வேலைகள் சத்தமில்லாமல் நடக்குது ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டமிருப்பதால் பணத்தை எண்ணி கட்டுபோட்டு தயாரா வச்சிட்டாராம் சுப்பராயலு. மாவட்ட செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏவுமான வசந்தம் கார்த்திகேயனின் முழு ஆதரவும் இருப்பதால், சுப்பராயலு ரொம்ப தெம்பாகவே இருக்கிறார் ஆக உதயசூரியன் உதிப்பது உறுதியாகிவிட்டது.
Leave a Reply