Save 20% off! Join our newsletter and get 20% off right away!

நெல்லை மேயர் வேட்பாளர் வாய்ப்பு யாருக்கு ? பரபரப்பான பின்னணி தகவல்கள்

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள  கொரோனா  பிரச்னை, கடும் மழை காரணமாக நகர்ப்புற தேர்தல் தள்ளிப் போய்   விட்டது.குறிப்பாக மழை வெள்ளம் மக்கள் மத்தியில் தீராத வடுவாக இருக்கிறது.அதை மறக்கடிக்க வேண்டியது ஆளும் கட்சியின் கடமை .அதனால் தமிழகம் முழுதும் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தி அதன் வரவேற்பு எப்படி இருக்கிறது .மக்கள் மனநிலை மாறிவிட்டதா என்பதை ஆளும் கட்சி பார்த்து வருகிறது. அதன் முதல் கட்டமாக மேற்கு மண்டலத்தைக் குறிவைத்து கோவையில் விழா நடத்திப் பிரமிக்க  வைத்தார். அடுத்து  சேலத்தில் பிரமாண்ட விழாவை நடத்தி முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறார். இப்படி அனைத்து  மாநகராட்சிகளிலும்  தொடர்ந்து இந்த திட்டங்களை  முதல்வர் வழங்க இருக்கிறார் அதன் பிறகுதான் தேர்தல்  நடக்கும் என்பது உறுதி.

 இன்னும் கூற வேண்டுமானால் ஜனவரி 15க்கு பிறகு தேர்தல் அறிவிப்பு இருக்கலாம்.எனவே மேயர் தேர்தலைக் கவனத்தில் கொண்டு திமுக காய் நகர்த்துவதில்  வியப்பில்லை.. ஒவ்வொரு மாநகராட்சிகள்  வேட்பாளர் தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. இந்த நிலையில்  யார் மேயர் வேட்பாளர்  என்பது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது,

நெல்லையைப் பொருத்தவரை மேயர் பதவி என்பது திமுக , அதிமுக இரு கட்சிகளிடமும் கடும் போட்டி இருக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால்  வேட்பாளர் தேர்வு என்பதைப் பொறுத்தவரை  இரு கட்சிகளுமே மிகக் கவனமாகச்செய்யும் என்பதை மறுப்பதற்கு இல்லை. எனவே தற்போதைய  யார் யார் வேட்பாளராகத்  தேர்வு செய்யப்படுவார்கள் என்ப நம்பகமான தகவல் கிடைத்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாக இருக்கும் சிலர் யார் என்பதை   பல்வேறு கட்ட பரிசோதனைகள் கள  வாய்ப்புகளை உளவுத்துறை மிகத் தெளிவாகக் கணித்து தலைமைக்கு அனுப்பி  வைத்துள்ளது.

 நெல்லை கடந்த 1994-ம் ஆண்டு தான் மாநகராட்சியாக அந்தஸ்து பெற்றது. இதுவரை அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட 3 பெண் வேட்பாளர்கள்  மேயர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். திமுக சார்பில் உமாமகேஸ்வரி ஒருமுறை வென்றுள்ளார்.மேலும் ஏ.எல். சுப்பிரமணியன் ஒருமுறை வென்றுள்ளார்.

நெல்லை மாநகராட்சி எல்லைக்குள் பிள்ளைமார், முக்குலத்தோர், சிறுபான்மையினர் என மூன்று தரப்பினரின் வாக்குகளும் சமபலமாக திகழ்கின்றன. இதனால் இந்த மூன்று பிரிவுகளில் இருந்தே வேட்பாளர் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. அவை நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகியவைஆகும்.இங்கு மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.

திமுகவைப் பொறுத்தவரை எந்த தேர்தலிலும் தனக்கென ஒரு தனித்தன்மை கொண்ட கட்சி, ஏனென்றால் அதிமுக ஜெயித்தபோதே நெல்லையில் துணை மேயராக திமுக வேட்பாளர் தேர்வானார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே ஜாதிவாரி வாக்குகள் ,கட்சி ரீதியான வாக்குகள் என எப்போதுமே கணிசமான செல்வாக்குடன் திமுக வென்று  வருகிறது.இம்முறை திமுக, அதிமுகவில் யார் யார் நிறுத்தப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. திமுக சார்பில் துரை சக்தி சீதா, ராஜகுமாரி, விஜிலா சத்தியானந்த் , புவனேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோர் பெயர் பட்டியலில் உள்ளது. அதிமுக சார்பில் அபரூபா சுநந்தினி ,டாக்டர் வி.கவிதா முத்துலட்சுமி , அங்கம்மாள் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரையில் உள்ளது.  நெல்லையில் இதுவரை கோனார் சமுதாயம், எஸ்.சி சமுதாயம் ,பிள்ளைமார் சமுதாயம் என  அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் முக்குலத்தோரில் தேவர் சமுதாயத்துக்கு இதுவரை வாய்ப்பு அளிக்கப்படவில்லை . அப்படி தேவர் சமுதாயத்துக்குத் தர எண்ணினால் துரை சக்தி சீதாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என அறிவாலய வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

1-துரை சக்தி சீதா.

திமுக லிஸ்டில்  முதலிடத்தில் இருக்கும் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் துரை சக்தி சீதா .திமுகவின் ஆரம்பகால பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். பாம்பே திரையரங்கம் குடும்ப பின்னணி கொண்ட இவர் இறுதி ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி ஆவர். முக்குலத்தோரில் மறவர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் தமிழகம் முழுதும் கடந்த 7 ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு இலவச போட்டி தேர்வுகள் நடத்தி வருவதால் தலைமைக்கு மிகவும்  பரிச்சயம்.பெற்றுள்ளதால்,   திமுக குடும்பத்தின்  நேரடி தொடர்பில் இருப்பதாலும், இவரின் பெயரை திமுக தலைமை டிக் செய்துள்ளது  அத்துடன் பொருளாதாரம், , சமுதாய  பலம்,   சீட் கேட்பதில் இளம் வயது  நிர்வாகி இவர்தான். என்பதும் கூடுதல் சிறப்புகள் . .எனவே இவரின் பெயரை திமுக தலைமை முதலில் டிக் செய்து  வைத்துள்ளது.

 2 . ராஜகுமாரி

முன்னாள் திமுக கவுன்சிலர் ராஜகுமாரி, நன்கு படித்தவர்.நீண்ட காலமாகக் கட்சியில் இருப்பவர்.இவருக்கு தனிப்பட்ட முறையில் எந்த செல்வாக்கும்  கிடையாது. கட்சியில் அவ்வளவாக  ஆதரவு  கிடையாது. மேலும் பொருளாதார  வசதியும் இல்லை. மாவட்டச் செயலர் ஆதரவும் இல்லை..ஆனால் இவர் அமைச்சர்கள் துரைமுருகன் , பொன்முடி, ஆகியோருடன் நேரடி தொடர்பில் இருப்பவர்.  3 முறை கவுன்சிலர் ஆக இருந்தவர்.அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து சென்னையில் முகாமிட்டுள்ளனர். மூப்பனார் சமூகத்தைச் சேர்ந்தவர்  என்பதால் ஆர் .எம். வீரப்பனைப் பெரிதும் நம்பி உள்ளார்.மேலும் , ராஜகுமாரி முன்னாள் எம் எல் ஏ மாலை ராஜாவின் ஆதரவாளர் என்பதும் மாவட்ட செயலர் அப்துல் வகாப்புக்கு எதிர்முகாம் என்பதுடன் முன்னாள் அமைச்சர் டி பி எம் மைதீன்கான் ஆதரவாளர் ஆவர். தற்போது இவருக்கு சீட் கேட்டு அவரின் ஆதரவாளர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

 3.விஜிலா சத்தியானந்த்

சாதாரண டைப்பிஸ்டாக இருந்தவரை  அதிமுக மேயராக வாய்ப்பு அளித்து அழகுபார்த்தார்  ஜெயலலிதா.

எனவே அவரின்  அன்பு,ஆதரவைப் பெற்றவர்.,அதிமுகவில் ஒரு ஆணை விட  அனைத்து  பதவிகளையும் அனுபவித்தவர்.  மாநில மகளிரணி செயலராக இருந்தவர். இவர் திமுகவில் சேர்ந்துள்ள போதிலும்  உள்ளூர் கட்சியினரின் ஆதரவும் இல்லை. தலைமையின்  ஆதரவும் இல்லை . இன்னும் சொல்லப்போனால் இப்போதுள்ள திமுக செயலர்,எம் எல்  ஏ  அப்துல் வஹாப்பை ஒருமையில் பேசியவர். அத்துடன் தேவர் சமுதாயத்துக்கு எதிராக வஹாப்   உள்ளார் என்று பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே இவருக்கு நிச்சயம் திமுக தரப்பில் ஆதரவு இல்லை. அது இவரின் மைனஸ் .அதே சமயம் அதிக பணம் படைத்தவர்  என்பது இவரின்  பிளஸ் பாயிண்ட் எனலாம்.

 4..புவனேஸ்வரி.  இவரும்  தேர்தல் சமயத்தில்  திமுகவுக்கு சென்றது பெரும் பின்னடைவு என்று சொல்லலாம். விஜிலாவுக்கு பிறகு மேயர் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது இந்து சைவ வெள்ளாள சமுதாயம் என்பதால் தி. பிள்ளைமார் சமுதாயத்தில் செல்வாக்கு உள்ளது. அனைத்து  சமூக சங்கங்களுடன் நேரடி தொடர்பில்  உள்ளவர்பதவியை எதிர்பார்த்து  திமுகவில் சேர்ந்தது இவருக்குக் கட்சிக்கும் பின்னடைவுஎன்பதுடன்  அதுவே அவருக்கு மைனஸாக இருக்கிறது. துணை மேயர் கணேச

னுடன்  ஏற்பட்ட மோதலில் பெரிதும் சம்பாதிக்காதவர். கட்சி ஆதரவு இல்லாத காரணத்தால் இப்போது ஆன்மீகத்தில் ஈடுபட்டு வருகிறார், 5. மகேஸ்வரி வட  இந்தியப் பெண்ணான இவர்  மாவட்ட மகளிரணி திமுக அமைப்பாளர், .வட  இந்திய லாலா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர்   கவுன்சிலருக்கு போராட வேண்டிய  நிலையில் இருக்கிறார்.. கடந்த ஆண்டு   இவரின் கணவர் இறந்துவிட்டார். இதனால் போராடுகிறார். பொருளாதார ரீதியாக கட்சியிலும்,ம் திண்டாட்டம்தான். இந்த நிலையில் இவரின் வார்டை தேவர் சமுதாய தலைவர்களில் ஒருவரான மூர்த்தி தன் மனைவிக்காக கைப்பற்ற முடிவு செய்துள்ளார். முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி இறப்புக்குப் பின்  மெஜாரிட்டி சமுதாயத்துக்குக் கொடுக்காமல் உப்புக்குச் சப்பாகப் போடப்பட்டவர் .: திமுகவின் கள  நிலவரம் இப்படி இருக்கும் சமயத்தில் அதிமுகவின் கணக்கோ வேறு விதமாக இருக்கிறது. காரணம் இப்போது அங்கு நிலவும் குழப்பம். முடிவெடுக்க முடியாத நிலை என பல்வேறு பிரச்னைகள் உள்ளன/ எனவே அதிமுகவில் மேயர் வேட்பாளர் ரேஸில் இருப்பவர்கள் யார் என்ற விவரம் கிடைத்துள்ளது. 1. அபரூப  சுநந்தினி.இவர் அரசு மருத்துவராக   பனிபுரிந்தவர். அந்த பதவியை ராஜினாமா செய்து  கட்சியில் தன்னை  ஈடுபடுத்திக் கொண்டவர். அதிமுகவில் தனக்கென தனி செல்வாக்கைக் கொண்டவர். இவர் அம்மா கிளினிக் கொண்டுவந்தபோது அதில் ஈடுபாட்டுடன் இருந்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றவர். அத்துடன் இம்முறை மாநகராட்சியில் இவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று கூறலாம்.  

 .2-டாக்டர்  கவிதா பிரபல அதிமுக வக்கீல் பாலசுப்ரணியம் மனைவி. அதிமுக மாவட்ட துணை செயலர் கலப்பு

திருமணம் செய்த்தவர்  செட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர். அரசு மருத்துவராகப்  பணி புரிந்தவர். அந்த பதவியை ராஜினாமா செய்து  கட்சியில் தன்னை  ஈடுபடுத்தி கொண்டவர். அதிமுகவில் தனக்கென தனி செல்வாக்கை கொண்டவர்.  அம்மா கிளினிக் கொண்டுவந்தபோது அதில் ஈடுபாட்டுடன் இருந்தது முன்னாள் முதலவர் ஜெயலிதாவின் நன்மதிப்பை பெற்றவர். அத்துடன் இம்முறை மாநகரட் சியில் இவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று கூறலாம்.அபரூப  சுநந்தினிக்கு மேயர் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில்  கவிதா அந்த இடத்தைப் பிடிக்கும் நிலை உள்ளது..

3.முத்துலட்சுமி

 .அதிமுகவின்  பெண் பிரமுகர் 25 வது வார்டை சேர்ந்த முத்துலட்சுமி .இவர் பொருளாதார ரீதியாகப் பெரிய அளவில்  பலம் கிடையாது. எனவே திமுக சார்பில் தேவர் சமுதாய வேட்பாளர் யாரும் கிடைக்காத பட்சத்தில் இவரை திமுகவுக்கு எதிராகக் களம் இறக்கும் வாய்ப்பு இருக்கும் என்பது உண்மை.  

எனவே மேயர் தேர்தல் அதிக  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும்  இவரின் சிறப்பு என்னவெனில் சுயேச்சையாகக் கடந்த முறை இவர் நின்றதால் விஜிலா  வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது மிக முக்கியமானதாகப்  பார்க்கப்படுகிறது.. திமுகவில் தேவர் சமுதாய வேட்பாளரை நிறுத்தினால் அதிமுகவில் இவர் நிறுத்தப்படுவார். அத்துடன் இவர் வார்டில் காங்கிரஸ் சார்பில் சங்கரபாண்டியன் நிற்பதால் எளிமையாக வெல்லும் நிலை முத்துலட்சுமிக்கு உள்ளது.

4..அங்கம்மாள்

13 வது வார்டு கவுன்சிலராக இருந்தவர்.   அதிமுகவில் பிள்ளைமார் சமுதாயம்   இல்லை என்பதால் இவருக்கு ஒரு வாய் ப்பு கிடைக்கும் எனலாம். முன்னாள் அமைச்சர்கள் ,திண்டுக்கல் சீனி வாசன்,நத்தம் விசுவநாதன்  ஆதரவும்  நேரடி தொடர்பும்  உள்ளது. பிள்ளைமார் என்ற வாய்ப்பு கிடைத்தால் தனக்குக் கிடைக்கும் என  இவர் நம்புகிறார்.

 இப்படி எல்லாவற்றையும் அலசி  ஆராய்ந்து பார்க்கும்போது சமுதாய பலம், பொருளாதார பலம் ,தனிப்பட்ட செல்வாக்கு ,கல்வி செயல்பாடு என்ற  நிலை உள்ளது. இறுதிக்கட்ட நிலவரப்படி இப்போது களத்தில்  இருவர் மட்டுமே போட்டியில் இருப்பார்கள் என்று உறுதிப்படக் கூறலாம். அந்த வகையில் திமுகவின் துரை சக்தி  சக்தியும் அதிமுகவின் அபரூப  சுநந்தினிக்கு இடையில்தான் உண்மையான போட்டி என்பது தெரிகிறது. மேலும் இதுவரையில் திமுக\ சார்பில் ஒருமுறை  பிள்ளை சமுதாயம், ,ஒருமுறை யாதவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அது தவிர எம் எல்  ஏ பதவி பிள்ளைமார் சமுதாயத்துக்கும்  ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் தமிழக   வரலாற்றில் முதல்முறை யாக யாதவர் சமுதாயத்துக்கு இரண்டு அமைச்சர்களை திமுக  வாரி வழங்கி இருக்கிறது, அதனால் யாதவர் சமுதாய வேட்பாளரை மேயராக நிறுத்த திமுக முன் வராது  எனலாம்  மொத்தத்தில்  இதுவரை வாய்ப்பு அளிக்காத முக்குலத்தோர் சமுதா யமே முதலிடத்தில் உள்ளது.எது எப்படியாக இருந்தாலும் தலைமையின்  இறுதி தேர்வு என்ன என்பதை அறிந்து கொள்ள இன்னும் சில நாள்கள்  நெல்லை மக்கள் பொறுத்திருக்க வேண்டும்.

– ஆர்.அருண்குமார்