ஆண்டிபட்டி அருகே தனது ஐம்பத்து நான்கு வயது கள்ளக்காதலியின் இருபத்தேழு வயது மகளை ரகசியமாக ஆபாசமாக வீடியோ பதிவு செய்து அதனைக் காட்டி மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் மனைவி சுமதி. இவருக்கும் இவரது உடன்பிறந்த தம்பியின் நண்பரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னியப்பபிள்ளைபட்டி அரசுப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் அருள்குமரன் என்பவருக்கும் பதினைந்து வயது வித்தியாசம் இருந்த போதும் பல ஆண்டுகளாக ரகசிய தொடர்பு இருந்தது.
இதனால் சுமதி கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள அருள்குமரன் வீட்டில் அடிக்கடி வந்து தங்கிச் செல்வது வழக்கம்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமதி அவரது இருபத்தேழு வயதுடைய மகளுடன் அருள்குமரன் வீட்டில் வந்து தங்கியுள்ளார். அப்போது சுமதியின் மகள் பாத்ரூம் செல்லும் போதும், குளிக்கும் போதும் பலமுறை ரகசியமாக ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். அதனைக் காட்டி மிரட்டி சுமதிக்கு தெரியாமல் அவருடைய மகளை பலமுறை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மகளுடன் பண்ணைக்காடு திரும்பிச் சென்ற சுமதியின் வாட்ஸப் எண்ணிற்கு அருள்குமரன் சுமதியின் மகளைத் திருமணம் முடித்தது போல ஒரு புகைப்படத்தை தயார் செய்து அனுப்பியுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சுமதி இதுகுறித்து அருள்குமரனிடம் கேட்ட போது,
உனது மகளை என்னைத் தவிர வேறு யாருக்கும் திருமணம் செய்து வைக்கக் கூடாது என்றும் அவ்வாறு திருமணம் செய்து வைக்க முயன்றால் உனது மகளின் ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
அதன் பின்னர் சுமதி தனது மகளிடம் விசாரித்த போது நடந்த அத்தனை சம்பவங்களையும் சுமதியின் மகள் தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுமதி ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருள்குமரன் மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் அருள்குமரனை கைது செய்து,அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்திற்கு அருள்குமரனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்ததாகக் கூறி அருள்குமரனின் அம்மா சரோஜா, அப்பா முருகேசன், தங்கை மீனா ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
அரசுப்பள்ளி ஆசிரியர் தன்னை விட பதினைந்து வயது மூத்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது மட்டுமல்லாமல், அவரது இருபத்தேழு வயது மகளை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் ஆண்டிபட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– கா.ராதாகிருஷ்ணன்
Leave a Reply