Save 20% off! Join our newsletter and get 20% off right away!

டல்லடிக்கும் மந்திரிகள்… பொங்கலுக்கு பிறகு மந்திரி சபை மாற்றம் – முதல்வரின் மாஸ்டர் பிளான்!

தமிழகத்தில் திமுக  அரசு  பொறுப்பற்று இன்று வரை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதை நீதிமன்றமே கூட பதிவு செய்துள்ளது. பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.  எனவே.என்ன குறை இருக்கிறது து என்று அதிமுக, பாஜக தலைவர்கள் கண்ணில் விளக்கெண்ணயை ஊற்றிக்கொண்டு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தனது அமைச்சரவை சகாக்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பதில் முதல்வர் தனி அக்கறை காட்டி வருகிறார். இதற்கென உளவுத்துறையும் தனது வேலையே திறம்பட செய்து முதல்வருக்கு தினம்  சமர்ப்பித்து  வருகிறது.அப்படி இருந்தும் ஒரு சிலர்  தங்கள் விளையாட்டை காட்டி வருவது அரசால் புரசலாக முதல்வரின் காதுக்கு சென்றுள்ளன. இதில் வேடிக்கை என்னவெனில் பரம விரோதியான அதிமுக புள்ளிகளுக்கு சில அமைச்சர்கள்  மறைமுகமாக உதவி வருவது தெரியவந்துள்ளது. சமீபத்தில் கோவையில் நடந்த டாஸ்மாக் ஏலத்தில் சிண்டிகேட் அமைத்துள்ளது எதிர் கட்சிகள் மத்தியில் தற்போது ஹாட் டாபிக் பேச்சாக உள்ளது. இப்போதுள்ள சூழலில் தமிழக அரசின் செயல்பாடுகளில் எந்தவித குறையும் இல்லை.

ஒரு சிலரால் மட்டும் பிரச்னைகள் எழுந்துள்ளன. கடந்த சில மாதங்களாக இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. மழை, கொரோனா என்று அரசுக்கு நேரம் அதில்தான் கவனம் செலுத்த  முடிந்தது. அமைச்சர்களை பொறுத்தவரையில் ஒரு சிலரை மட்டுமே பத்திரிகை, ஊடகங்களில் அடிக்கடி பார்க்க  முடிகிறது.இது தெரிந்தே நடக்கிறதா அல்லது மற்றவர்களின் செயல்பாட்டுக்கு தடையா  என்றும் கேவிகள் எழுந்துள்ளன. வெள்ள நேரத்தில் சென்னையில் அமைச்சர்கள் பம்பரமாக முதல்வருடன் இணைந்து செயல்பட்டனர். கொரோனா காலத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனின் செயல்பாடு பெரிதாக பேசப்பட்டது. மழையில் முதல்வரை பாராட்டாதவர்கள்  இல்லை.

ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது, இப்போது டாப் லிஸ்டில் அமைச்சர்கள் துரைமுருகன்,  மா.சுப்ரமணியன்,,சேகர்பாபு, எ .வ.. வேலு,அன்பில் மகேஷ், கே,.என் நேரு , ஐ .பெரியசாமி, உள்ளிட்டோர்தான் அடிக்கடி முகம் காட்டி வருகின்ற்றனர். முகமே தெரியாமல் பலர்  இருக்கின்ற்றனர்.மொத்தமுள்ள மந்திரிகள்  அனைவருமே பம்பரமாக செயல்பாட்டால் மட்டுமே திமுக அரசுக்கு நல்ல பெயர் கிட்டும் என்பது முதல்வரின் கணிப்பு.. இன்னும் சொல்வதென்றால் முன்னாள் அதிமுக அமைச்சர்கள், இன்றுள்ள  திமுக அமைச்சர்களின் செயல்பாடு முதல்வருக்கு பிடித்துள்ளது. வெட்டி வா என்றால் கட்டி வா எனற ரீதியில் அவர்கள் இருக்கின்றனர்
. இதில் டாப் மோஸ்ட்  செந்தில் பாலாஜி, அடுத்து ராஜ கண்ணப்பன், ஏற்கனவே வேலு அசைக்க முடியாத சக்தி. பொருளாளருக்கு  உரிய அத்தனை தகுதிகளும் அவருக்கு உண்டு. அரசு பொறுப்பேற்ற சில  மாதங்களில்  ராஜா கண்ணப்பனின்  வைட்டமின் செயல்பாடுகளா ல் தலைமை வெகு திருப்தியில் உள்ளது. நிதித்துறையை பொறுத்தவரை எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் அமைச்சர் தியாகராஜன் நிதானமாக செயல்பட தன்னை தயார்படுத்திக் கொண்டுவிட்டார்.  

தமிழக அரசின் வரவுக்கும் பற்றாக்குறையை தீர்ப்பதற்கும் நல்ல ஆலோசனைகளை அளித்து வருகிறார். இப்படி ஒவ்வொரு அமைச்சரும் சீரிய முறையில் சிறப்புடன் செயல்பட்டு வந்தாலும் மன நிறைவு இல்லை என்ற பதில் உளவுத்துறையின் அறிக்கையில்  சுட்டி காட்டப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் நாடார் சமுதாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது கனிமொழிக்கும் நல்ல எதிர்காலத்தை அளித்துள்ளது. இருந்தாலும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், கீதா ஜீவன், சபாநாயகர் அப்பாவு என அனைவருமே தங்களின்  எதிர்காலத்தை நினத்து கவலைப்படவும் செய்கின்றனர். குறிப்பாக அப்பாவு சபாநாயகராக நீடிப்பதை விரும்பவில்லை தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று  காய் நகர்த்தி வருகிறார். அடுத்து மனோ தங்கராஜ் .

இவரும் எம்..பி. ஒருவரும் கூட்டணி அமைத்து மணல் குவாரிகளில் .லாபம் சம்பாதிப்பதாக ஒரு குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் சுமத்தி வருகின்றன.இதைக் கண்டித்து நாள் தமிழர் கட்சி சார்பில் சீமான் போராட்டமே நடத்தினார். கேரளத்துக்கு கனிம வளம் கடத்தப்படுவதாக பகிரங்கமாக குற்றம்  சுமத்தினார்.மேலும் . திமுக எம்.பியின்  லாரிகள் மணல் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பது தென்மாவட்டத்தில் புயலை கிளப்பியது. தூத்துக்குடி கீதாஜீவனோ கனி மொழி  எம்பியுடன் கருத்து மோதலில் இருப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது. இந்த நிலையில் எந்த அரசும் அளிக்காத மரியாதையை யாதவ சமுதாயத்துக்கு திமுக அளித்துள்ளது. ரஜகண்ணப்பன், பெரிய கருப்பன் ஆகிய இரு மந்திரிகள்.உள்ளனர். இதில் ராஜா கண்ணப்பன் அடிக்கடி தென்மாவட்டத்தில் தலையை காட்டி வருகிறார். காரணம் தென்மாவாட்ட  யாதவ மக்களை ஒருங்கிணைத்துள்ளார்.  மேலும் இவர் போக்குவரத்து துறையில் கரை கண்டவர். சில நியமனங்களில் தலைமையுடன்  சற்று மனவருத்தம் உள்ளதை காண முடிகிறது.
திமுகவின் மூத்த தலைவரான துரைமுருகன் கடும் வருத்தம் அடைந்துள்ளார்  என்கிறார்கள்.காரணம் அவரை  இளம் தலைமுறை கண்டுகொள்ளவில்லை. உதயநிதி போன்றவர்களிடம் தான் கைகட்டி நிற்பதா என்ற எண்ணம். அதே நேரத்தில் இவரின் நலம் விரும்பிகள் சிலர் , ‘ஐயா நீங்கள் ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது. இப்படியே இருந்தால் உங்களின் மகனுக்கு எதிர்காலம் உண்டு. எதிர்த்தால் அவ்வளவுதான்’ என்று ஆலோசனை கூறி \உள்ளனர். எனவே அவர் இனி பேசாமல் இருப்பது நிச்சயம்.

திண்டுக்கல்  ஐ பெரியசாமி வேறு இலாகாவை எதிர்பார்க்கிறார். அவருக்கும் இதே பதிலைத்தான் நண்பர்கள் கூறி இருக்கிறார்கள். ஏனென்றால் அவரின் மகன் பழனி எம் எல் ஏ. .நேரு நிலையோ வேறு மாதிரி இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறார். எல்லாம் அவன் செயல் என்று உடன்பிறப்புகள் உதயநிதியை கை  காட்டுகிறார்கள். இப்படி ஒருசில குறைகள் நிறைகள்  இருந்தாலும்,
பொங்கலுக்குப்பிறகு நிறைய மா ற்றங்களை செய்ய முதல்வர் திட்டம் தீட்டி இருக்கிறார், மேற்கு மண்டலத்தில் வெள்ளகோவில் சாமிநாதன், ஈரோடு முத்துசாமி ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் வெள்ளகோவில் இலாகா  மாறலாம். கோவையில் பொறுப்பு ஏற்றுள்ள செந்தில் பாலாஜி மகேந்திரனுடன் கைகோத்து சிறப்பாக செயல்படுகிறார். மகேந்திரனுக்கு மாவட்ட செயலாளர் வாய்ப்பு கிட்டலாம்.

தஞ்சை  டெல்டாவில் மூத்த தலைவர் .டி ..ஆர்.பாலு ,தன்  மகன் ராஜாவுக்கு பதவி  கேட்கிறார்.ஒரே குடும்பத்தில் இப்படி வாரிசு கூடாது என தலைவர் சொன்னார். ஆனால் உதயநிதி விவகாரத்தை யாரும் கேட்க கூடாது.

இது தவிர  சீனியர் அமைச்சர்கள்  ரகுபதி,பொன்முடி,  பன்னீ ர்செல்வம், சாத்தூர் ராமச்சந்திரன் , தங்கம் தென்னரசு, அன்பரசன், சக்கரபாணி, மூர்த்தி, சிவசங்கர் செயல்படுகின்ற்றனர். புதுமுகம்  கயல்விழி, செஞ்சி மஸ்தான், ஆவடி நாசர், சி.வி.கணேசன்,மதிவேந்தன், ராமச்சந்திரன், காந்தி, மெய்யநாதன் இவர்களை என்றோ ஒருநாள் மட்டுமே மீடியாவில் பார்க்க முடிகிறது. மிகவும் பிரபலம் இல்லாத அமைச்சர்கள் சொந்த தொகுதியில்மட்டுமே தலை காட்டி வருகின்றனர். இன்று மக்கள் மனதில் சில  கேள்வி எழுந்துள்ளது.

அதில் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பு விவகாரத்தில் அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் அடக்கி வாசிப்பது ஏன் என்பது ஒருகேள்வி. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி,தங்கமணி, விஜயபாஸ்கருடன் திமுக அமைச்சர்கள்  சமரசம் என்று ஒரு செய்தி உலாவருகிறது. இதற்கு தலைமை இதுவரை பதில் சொல்லவில்லை. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி  வருகின்றன. மத்திய அரசு ஒரு சில பட்டியலை எடுத்து வைத்துள்ளதாகவும் அது முதல்வர் பார்வைக்கு சென்றுள்ளதால் விரைவில் பலருக்கு கல்தா காத்திருக்கிறது என்று அறிவாலயத்தில் உள்ள பட்சிகள் சொல்வதை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

– மூத்த பத்திரிகையாளர் எஸ்.ரவீந்திரன்