ஏழுமுறை தேர்தலை சந்தித்து நான்குமுறை எம்எல்ஏ ஆனவர் பெரியவர் பெ.சு.திருவேங்கடம் இவரை தொகுதி பெயரை வைத்தே கலசபாக்கத்தார் என்று செல்லமாக அழைப்பார்கள் அவருடைய மகன் பெ.சு.தி. சரவணன் கலசபாக்கம் திமுக சிட்டிங் எம்எல்ஏ! மூன்று முறை தொடர்ந்து சீட் கேட்டார் இந்த முறை பலிச்சிடுச்சி அப்பாகிட்ட முப்பத்தி அஞ்சி வருஷம் கொடுத்தோம் புள்ளகிட்ட எத்தனை வருஷம் விடறது தொகுதியை? என்கிற கேள்வி தொகுதியில் அனைத்து கட்சியினர் மத்தியிலும் உண்டு! தொகுதியை எப்படியாவது தக்கவச்சிகணும் என்கிற ஆசை மனம் நிறைய உண்டு சரவணனுக்கு, தேர்தலின்போதே சரவணனை தோற்கடிக்க நினைத்த திமுக ஒன்றிய செயலாளர்களின் ஆட்டம் தொகுதியில ரொம்ப ஓவர்! போளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.வி.சேகர் மட்டும்தான் அமைதியானவர் கலசபாக்கம் கிழக்கு சிவக்குமார், மேற்கு சுப்பிரமணி, புதுப்பாளையம் மேற்கு இளங்கோவன், கிழக்கு ஆறுமுகம், ஜமுனாமரத்தூர் கேசவன் உள்ளிட்டவர்கள் தொகுதியை யாராவது வாங்கிக்க தயாரா இருந்தா, இவங்க விற்க தயாரா இருக்காங்க, கலசபாக்கம் யூனியன் சேர்மன் தமிழரசியின் கணவர் குட்டி (எ) ராஜசேகரை மூடு வரும்போதெல்லாம் வன்கொடுமை பண்ணி பணம் கேட்டு டார்ச்சர் பண்றார் மேற்கு ஒன்றியம் சுப்பிரமணி நல்லது கெட்டதுனு எந்த விழையமா இருந்தாலும் தவறாமல் ஆஜரகிவிடும் சரவணன் ஊரில் இருந்தால் தொகுதிக்குள் அரசு நிகழ்ச்சி அரசியல் நிகழ்ச்சினு நகர்வலம் வருவார் முக்கியமான விஷயம் சொந்த பணத்தில மொய் எழுதறார். தொகுதி மக்களிடம் வாங்கும் மனுக்களை தன்னுடைய பரிந்துரை கடிதங்களை இணைத்து, மாவட்ட செயலாளரும் மந்திரியுமான எ.வ.வேலுவிடம் கொடுத்துவிடுகிறார். சில சமயம் மனுக்கள் குவியலை பார்த்து சிரித்தபடியே யோவ் சரவணா தமிழ்நாட்ல இருநூற்றி முப்பத்தி நான்கு தொகுதிகள் இருக்கு எல்லாமே உன் தொகுதிக்கே கொடுத்திடனுமா? என்று கிண்டல் பண்ணுவார். தேர்தல் வாக்குறுதிகளை மறந்திடாம இருக்க அடிக்கடி மனசுக்குள்ள சொல்லி பார்ப்பார்போல, சட்டமன்றத்தில் பேசி சில கோரிக்கைகளை சாதித்திருக்கிறார் அதையெல்லாம் நூறு நாள் சாதனையில் சேர்த்துக் கொள்ளலாம். எதிர்பார்ப்புகளோடு வரும் கட்சியினரிடம் போன்ல பேசட்டுமா… லெட்டர் தரணுமா.. மந்திரியை பார்க்கணுமா.. நேர்ல வரனுமா.. என்ன செய்யனும் என்னை பயன்படுத்திக்கோ ஆனால் உனக்கு உதவி செய்யனும்னா என்கிட்ட பணமில்லை என்று கறாராக பேசிவிடுகிறார் சரவணன். அதிமுக மற்றும் திமுக ஊராட்சி மன்ற தலைவர்களே ஒரே மாதிரி நடத்துகிறார். நாங்கள் ஆளுங்கட்சி இல்லையா எங்களுக்கு எந்த சலுகையும் செய்வதில்லை என்று திமுகவினர் குமுறுகின்றனர். ஒன்றிய செயலாளர்கள் கலசபாக்கம் தொகுதியில் சரவணன் பெயரையும் திமுகவின் பெயரையும் ஏகத்துக்கும் பஞ்சர் பண்ணிகிட்டு இருக்காங்க தேர்தல் செலவுக்கு வாங்கிய கடனை திரும்ப அடைக்க வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல? ஆனா இப்படியே மக்கள் பணி செய்தால் சரவணன் தொகுதி மக்கள் மத்தியில் சர்க்கரையாக இனிப்பார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply