இடைத்தேர்தல் இரண்டரை வருடம் எம்எல்ஏவாக ஆளுங்கட்சியில் ருசி பார்த்த அரூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பொய்யம்பட்டி சம்பத்குமார் மாஜி மந்திரியும் தருமபுரி மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் தயவில் மீண்டும் வாய்ப்பை பெற்று அரூர் எம்எல்ஏ ஆகி இருக்கிறார் சம்பத்குமார். தேர்தல் செலவுகளை கட்சியே பார்த்துக் கொண்டதால், வெறுங்கையோடு களத்துக்கு போய் வெற்றியோடு திரும்பி இருக்கிறார் சம்பத்குமார் இடைத்தேர்தலில் எம்எல்ஏ ஆனபோது அதிமுகவினரை கண்டுகொள்ளாமல் தன்னுடைய தீவிர பொருளாதார வளர்ச்சி மீது அக்கறையாக இருந்தாரே அதையே மீண்டும் அச்சரம் பிசகாமல் தொடருகிறார். நல்லது கெட்டதுல கலந்துக்கறதில்ல கேட்டால் கொரோனாவை காரணமாக சொல்கிறார். கமிஷன் விஷயத்தில் கறாராக இருக்கிறார் விரல்விட்டு எண்ணக்கூடிய அதிமுக நிரவாகிகளை மட்டும் தொடர்புல வச்சிகிட்டு மற்றவர்களை அம்போவென விட்டுட்டார். எம்எல்ஏ அலுவலகம் பக்கம் எப்பொழுதாவது மின்னல் மாதிரி வந்து போவார். எதுவா இருந்தாலும் நேரடி டீலிங்தான் இடைத்தரகர்களை விரும்புவதில்லை. தீர்த்தமலையை சுற்றுலா தலமாக்கவும், புதிய காவல் நிலையம் கொண்டு வரவும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறார் அரூர் தொகுதி திமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சம்பத்குமாரின் கண்ணசைவில் செயல்படுகிறார்கள் என்கின்றனர் அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினர். ஓட்டுபோட்ட மக்களுக்கும் வெற்றிக்காக உழைத்த அதிமுகவினருக்கும் நன்றி சொல்ல நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் சம்பத்குமார், வருவாய்க்கு உண்டான தேடலில் தீவிரமாக இருப்பதாகவும் பாபு (எ) அறிவழகன் என்கிற ரியல் எஸ்டேட் அதிபர் மூலம் வீட்டு மனைகளும், கோட்டப்பட்டி, அரூர், நடுப்பட்டி, தீர்த்தமலை பகுதிகளில் விளை நிலங்களும் சம்பத்குமாரை பார்த்து பாசத்தோடு சிரிப்பதாக அதிமுகவினரே வாய்நோக பேசுகின்றனர். இதெல்லாம் நூறுநாள் சாதனையில் இடம் பிடிக்காதா என்று நம்மிடமே அப்பாவியாக கேள்வி கேட்கின்றன் பெயர் சொல்ல விரும்பாத பொய்யம்பட்டிவாசிகள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply