Save 20% off! Join our newsletter and get 20% off right away!

தமிழர்கள் திருடர்களா… என்ன ஆச்சு பிரதமர் மோடிக்கு ?

மோடி பிரதமர் பதவிக்கு வந்து 10 ஆண்டுகள் முடிந்த நிலையில் மீண்டும் அவருக்கு பதவி ஆசை விடவில்லை. இந்த நிலையில் தேர்தல் நடந்து வருகிறது. பழைய மாதிரி நிச்சயம் முடிவுகள் இருக்காது என அந்த கட்சியினரே கூறி வருகிறார்கள். இந்த நிலையில்தான் பிரசாரத்தில் மோடி கண்ணா பின்னவெ ன உளறி கொட்டி வருகிறார். தமிழகத்துக்கு பலமுறை பிரசாரத்துக்கு வந்துள்ளார். அப்போது என் தாய்.தந்தை, சகோதர, சகோதரி என உரிமையாக அழைத்து வந்தார். ஆனால் இப்போது அவரது பேச்சு தமிழக மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறைகளின் தொலைந்துபோனசாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக பிரதமர் தேர்தல் பிரசா ரத்தில் பேசியிருக்கிறார்.
ஏற்கனவே ஜெகந்நாதர் ஆலய கருவூ லம் தொடர்பான நிகழவுகளைப் பார்த்து. ஒட்டுமொத்த ஒடிசா மக்களும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில்தான் அந்தக்கருவூல அறையின் சாவி மிழ்நாட்டிற்குச்சென்றுவிட்டதாக பிரதமர் புது குண்டை தூக்கி போட்டுள்ளார். இதை தமிழ்நாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்? கொண்டு போனவர்கள் யார்? இப்படிப்பட்டவர்களை நீங்கள் மனனிப்பீர்களா?’ என்று உறுமியுள்ளார்.ஆரம்பத்தில் முஸ்லீம் மக்கள் மீது மென்மை போக்கை கையாண்ட நிலையில் அதில் இருந்து மாறி அவர்களை எதிரி போல விமர்சனம் செய்துள்ளார். இப்போது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மீது நட்பு சரியாக இல்லை .எனவே அவரை திட்டுவதாக நினைத்து உளறி விட்டார் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

ஒடிசா வில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியில் சக்தி வாய்ந்த நபராக உருவெடுத் துள்ள முதல்வர் நவீன் படநா யக்கிற்கு நெருக்கமான முன் னாள் ஐ ஏ எஸ். அதிகாரியும் தமிழ்நாட்டைச்சேர்ந்தவருமான வி.கார்த்திகேயன் பாண்டியனை குறி வைத்து மோடி பேசியதுதான் இப்போது பிரச்சனை. .இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அனைத்து முக்கிய தலைவர்களும் இப்போது வசை பாடி வருகிறார்கள். ஆனால் அண்ணாமலை, தமிழிசை, எல்.முருகன் போன்றவர்கள் சப்பைக் கட்டு கட்டி வருகிறார்கள்.
ஒடிசா மாநிலத்தில் பூரி ஜகநாதர் ஆலயத்தில் வருடாந்திர ரத யாத்திரையின்போது ‘சுனா பேஷா’ என்ற தங்கக் கவசம் இங்கிருந்து எடுக்கப்பட்டே கடவுள்களுக்கு சாற்றப்படும். வருடம் முழுக்க நடக்கும் திருவிழாக்களுக்கும் நகை எடுக்கப்பட்டு, கடவுளுக்கு சாற்றப்பட்டு, மீண்டும் வைக்கப்படும். ஆனால், உள் அறையான பிடார் பண்டார். கடந்த 38 ஆண்டுகளாகத் திற க்கப்படவில்லை.பொக்கிஷ அறை 1978ஆம் ஆண்டு மே 13க்கும் ஜூலை 23ஆம் தேதிக்கும் இடை யில் திறக்கப்பட்டது. அதற்குப் பிறகு, 1985ஆம் ஆண்டில் ஒரு முறை இந்தியத் தொல்லியல் துறையால் திறக்கப்பட்டது.
இந்த அறையில் எவ்வளவு நகைகள் உள்ளன என்பது குறி த்து கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளி த்த அப்போதைய சட்ட அமைச்சர் பிரதாப் ஜெனா, 1978ல் கணக் கெடுத்தபோது, 12,831 பரி தங்க நகைகளும் 22,153 கிலோ வெள்ளிப் பாத்திரங்களும் இருப்பதாக பதிலளித்தார். ஒரு பரி என்பது 11.66 கிராமைக் குறிக்கும். ஆகவே, 149.609 கிலோ தங்க நகைகளும் 258 கிலோ வெள்ளிப் பாத்திரங்களும் இருந்ததாக கொள்ளலாம். இதற்குப் பிறகு உச்ச நீதிமன் றத்தில் தொடரப்பட்ட ஒரு வழ க்கின் அடிப்படையில், ரத்ன பண்டாரின் உள் அறையைத்திறக்க 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி முயற்சி மேற்கொள் ளப்பட்டது. ஆனால், சாவி கிடை க்கவில்லை என்பதால் அறை திறக்கப்படவில்லை. பூரிமாவட்ட ஆட்சியர்தான் உள் அறையின் சாவியை வைத்திருக்க வேண்டும். ஆனால், சாவி எங்கே போனதெ ன்றே தெரியவில்லை.
இது மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்ததை அடுத்து ஜூன் 4ஆம் தேதி நீதித் துறை விசா ரணைக்கு மாநில அரசு உத்த ரவிட்டது. இதற்குப் பிறகு, ‘ர த்ன பண்டார் உள் அறையின் மாற்றுச் சாவி’ என எழுதப்பட்ட ஒரு உறை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் ஆவ ணக் காப்பகத்தில் கிடைத்ததாக ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இருந்தபோதும் நீதித்துறை விசா ரணை தொடர்ந்து நடந்தது. அதே ஆண்டு நவம்பரில் சுமார் 300 பக்க அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை இன்னும் பொது மக்களின் பார் வைக்கு வைக்கப்படவில்லை.
இதற்குப் பிறகும் இந்த விவ காரம் சர்ச்சையாகவே நீடித் ததால், 2024ஆம் ஆண்டின் ரத யாத்திரையின் போது ரத்ன பண்டாரைத் திறக்கலாம் என மாநில அரசுக்கு ஜெகந்நாதர் கோவிலின் நிர்வாகக் கமிட்டி பரிந்துரைத்தது. இதற்குப் பிறகு தொடரப்பட்ட ஒரு பொது நல வழக்கை விசாரித்த ஒடிஷா உயர் நீதிமன்றம், மாநில அரசு ஒரு உயர் மட்டக் குழுவை அமை த்து ரத்ன பண்டாரில் உள்ள பொருட்களைக் கணக்கெடுக்க உத்தரவிட்டது. அதன்படி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அரி ஜித் பசயத் தலைமையில் 12 உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்தது ஒடிஷா அரசு.இதற்கிடையில் தேர்தல் நெரு ங்கியதால், ஒடிஷாவில் தான் பேசிய பல கூட்டங்களில் ரத்ன பண்டாரின் காணாமல்போன சாவி குறித்து பிரதமர் கேள்வி எழுப்பினார். ஒடிசாவின் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் பிஜு ஜனதா தளத் தலைவர்களில் ஒருவரும் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவருமான தமிழர் வி. கார்த்திகேயன் பாண்டியனை குறிவைத்து, ரத்ன பண்டாரின் சாவி தமிழ்நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக பிரதமர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
பிரதமரின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்திருக்கும் வி. கார்த் திகேயன் பாண்டியன், “இந்த விவகாரம் குறித்து பிரதமருக்கு நன்றாகத் தெரியுமென்றால், அவர் சாவிகள் இருக்குமிடத் தைக் கண்டறிய வேண்டும். அவ ருக்குக் கீழே பல அதிகாரிகள் வேலை செய்கிறார்கள்.அவருக்கு இதைப் பற்றித் தெரிந்திருக்கும். அவர் ஒடிய மக்களுக்கு அதைத் தெரியப்படுத்த வேண்டும் என பதில் கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை, ‛‛இனிவரும் காலங்களில் தமிழர்களை அவமானப்படுத்தினாலோ, தமிழ் மொழியை கொச்சைப்படுத்தி பேசினாலோ, பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. ஒரு வாரத்திற்குள் தமிழ்நாட்டு மக்களிடம் மோடியும், அமித்ஷாவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால், தமிழகத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம்” என தெரிவித்து உள்ளார்.
ஆனால் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‛‛தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம்.என கூற நம்ம ஆட்கள் விடுவார்களா என்ன? முன்னாள் காங்கிரஸ் தலைவர்
இ.வி. கே. எஸ். இளங்கோவன் கடும் ஆத்திரமடைந்தார்.
அவர் கூறும்போது, என்றைக்கு, எப்போது, எத்தனை பேர் வருவார்கள் என்ற விபரத்தை மாநில தலைவர் முறைப்படி அறிவிப்பார். அதற்குள் நான் அண்ணாமலைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சாப்பாடு செய்யும் போது மாட்டிறைச்சி கறி செய்யுங்கள். நாங்கள் விரும்பி சாப்பிட தயாராக இருக்கிறோம். நீங்கள் தி.மு.க., காங்கிரஸ் மீது இட்டு கட்டி தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததாக புத்தகத்தை தாருங்கள். பரவாயில்லை, வாங்கி கொள்கிறோம். நாங்கள் மோடி சொந்த குடும்பத்துக்கே செய்த துரோக புத்தகத்தை தருகிறோம். அதையும் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியதால் இந்த விவகாரம் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படி மோடி உளறி வருவது மோசமானது என திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கண்டித்துள்ளார். பிரதமர் மோடி நான் கடவுளின் அவதாரம் என கூறியுள்ளார். எனவே அவர் நேராக கடவுளிடம் செல்ல வேண்டியதுதான் என கூறினார். இப்படி பயந்து உளறும் மோடி மீண்டும் பிரதமர் பதவியை பிடிப்பாரா என பொறுத்து இருந்து பார்ப்போம்.

-ஆர். அருண்குமார்