Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சோழவந்தான்- நிற்காமல் செல்லும் பேருந்துகள் போராட்டத்திற்கு தயாராகும் மக்கள்

சோழவந்தான்-
நிற்காமல் செல்லும் பேருந்துகள்
போராட்டத்திற்கு தயாராகும் மக்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தானி லிருந்து, திருமங்கலம் செல்லும் பேருந்துகள் சோழவந்தான் முதல் மேலக்கால் வரை பல இடங்களில்  நிறுத்தங்களில் நிற்கும் பெண்கள் பேருந்தை நிறுத்து
வதற்கு சைகை காண்பித்தாலும், ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்தாமல், செல்வதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். நேற்று சோழவந்தானிலி ருந்து திருமங்கலம் செல்லும் தடம் 1283எண் கொண்ட பேருந்து திருவேடகம் பேருந்து நிலையத்தில், ஐந்து
பெண்கள் இரண்டு ஆண்களுடன் பேருந்தை நிறுத்த சைகை காண்பித்த போது,
 நிற்காமல் சென்றது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் டூவீலரில் அவர்களை ஏற்றிக்
கொண்டு மேலக்கால் வைகை புது பாலம் வரை சென்று பேருந்தை மறித்து அவர்களை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்  ராஜேந்திரன் கூறும் போது: சோழவந்தானிலிருந்து, திருமங்கலத்திற்கு ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் இடை
வெளியில் தான் பேருந்து வருகிறது. அதுவும் ,
பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்கள் சைகை  காண்பித்து நிறுத்தச் சொன்ன பிறகும் நிறுத்தாமல், செல்வதால் அடுத்த பேருந்துக்காக இரண்டு மூன்று மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய
அவல நிலை ஏற்படுகிறது. இதனால்,  நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தாமல், செல்லும் ஓட்டுநர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை போக்குவரத்து கழக மேலாளர்கள் எடுக்க வேண்டும் இல்லை யென்றால், பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்ட ம் நடத்த
 வேண்டிய நிலை வரும் என்கிறார்.

-நா.ரவிச்சந்திரன்