ராசிபுரத்தில் இருக்கிற கண்ணியமிக்க காவல்துறை அதிகாரிகள் என்னதான் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் இந்த மாதிரி சட்ட விரோத செயல்பாடுகளில் இருந்து கிடைக்கிற பணம்தான் அவங்களுக்கு முழு திருப்தியை தருது…
கள்ளச்சாராயம் குடிச்சு கள்ளக்குறிச்சியில் இதுவரை 68 பேர் இறந்திருக்கிறார்கள்.
கள்ளச்சாராய சாவுக்கு பிறகு தமிழகத்தில் கண்ணியமிக்க காவல்துறை சந்துக்கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையில இப்ப மாமூல அதிகப்படுத்தி சந்துக்கிடையில ஓபனா ஓட்ட சொல்லி இருக்காங்களா ?
நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அனைத்து காவல் நிலைய உயர் அதிகாரிகளையும் சந்துக்கடைகள் இயக்கக் கூடாதுன்னு மிகவும் கண்டிப்பா சொல்லி இருக்கிறார்.
அதுமட்டுமல்ல, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ் உமா கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் மாதிரி இங்க எதுவும் சின்ன விஷயம் கூட நடக்கக்கூடாது சட்டவிரோதமா இங்கே ஏதாவது மது விற்பனை நடந்ததுன்னா காவல்துறை மட்டுமல்ல அந்த பாட்டில் விற்கப்பட்ட கடைக்காரர்களும் கூண்டோடு மாற்றப் படுவாங்கன்னு எச்சரிக்கை விடுத்திருந்தாங்க…
நீங்க என்னடா சொல்றது நாங்க என்னடா கேட்கிறது என்கிற மாதிரி … ராசிபுரத்தில் உள்ள காவல்துறையினர் திறந்த மனதோடு சந்து கடையை ஓட்ட அனுமதி கொடுத்திருக்காங்க …
கேட்டா இதெல்லாம் ஆளும் கட்சி அமைச்சர் அவரோட கடைங்க நாங்க ஏதும் பண்ண முடியாது அப்படின்றாங்க ?
கண்ணியமிக்க காவல்துறையில இந்த மாதிரி சில அதிகாரிங்க பண்ற செயல் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுது என சமூக அலுவலர்கள் வெளிப்படையாக பேசுகின்றனர்.
சரி இந்த விஷயத்துல மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், மாவட்ட ஆட்சியர் உமா எந்தமாதிரி நடவடிக்கை மூலம் தன்னுடைய கண்ணியத்தை வெளிப்படுத்துறாங்கனு பொறுத்திருந்து பார்ப்போம் .
– சங்கர்ஜி
Leave a Reply