மதுரை, சோழவந்தான் ரயில் நிலையத்தில் இரு வழி பாதையாக செயல்பட்டு வருகிறது. தினசரி 10க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. 60-க்கு மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கின்றன. இங்குள்ள பிளாட்பாரத்தில், தெருநாய்கள் தஞ்ச புகுந்ததால் ரயிலில் பயணம் செய்யக்
கூடிய பயணிகளும் அந்த பிளாட் பார்தில் நடை பயணம் செய்யக் கூடியவர்களும் அச்சத்துடன் செல்கின்றனர். இது மட்டுமல்லாது, ஒரு சில நாய்கள் அவர்களை பின் தொடர்வது பயத்தில் தாங்கள் கொண்டு
வரக்கூடிய பொருட்களை கீழே போட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது மட்டுமல்லாது,
சில நாய்கள் குரைப்பதால் குழந்தைகள் மற்றும் பெண்கள் பயந்து செல்லக்கூடிய நிலை அங்கு இருக்கிறது. இதனால், சோழவந்தான் ரயில் நிலைய பிளாட் பாரத்தில் தஞ்சம் புகுந்த நாய்களை, அப்புறப் படுத்த வேண்டும் என்று, ரயில்வே பயணிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
– நா.ரவிச்சந்திரன்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply