Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சோழவந்தான்-மூடப்பட்ட பாசன கால்வாய்விவசாயம் பாதிப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, நாச்சிகுளம் கிராமத்தில் உள்ள சுமார்  150 ஏக்கர் நிலத்திற்கு விவசாயம் செய்வதற்கு பெரியார் கால்வாயில் இருந்து கரட்டுப்பட்டி கிராமத்தின் நாச்சியார் மடைவழியாக தண்ணீர் பாசன வாய்க்காலில் வந்து இப்பகுதியில் விவசாய செய்வதற்கு தண்ணீர் வரத்து வருடம் தோறும் கிடைத்து வந்தது தற்போது , மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய் கிராமப் பகுதியில் பதித்து அதை சரிவர மூடாமல் அதிலிருந்து எடுக்கப்பட்ட மண் பாசன வாய்க்கால் ஓரமாக குவியல் குவியலாக அள்ளி குவித்து விட்டு சென்று விட்டனர்.  அந்த நேரத்தில், விவசாய பணிகள் நடைபெறாதால், பாசன வாய்க்கால்
 மூடி இருப்பது விவசாயிகளுக்கு தெரியாமல் இருந்தது. தற்போது கடந்த ஜூலை 3-ந் தேதி பேரணை முதல் கள்ளந்திரி வரை ஒருபோக பாசனத்
திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை கரட்டுப்பட்டி நாச்சிகுளம் விவசாயப் பகுதிகளுக்கு  பாசன வாய்க்
காலில், தண்ணீர் வரவில்லை. இதற்கு காரணம் மாநகராட்சி குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்டு மண் மேவியதாலும் குழாய் பதிக்கப்பட்ட இடத்தில்  எடுக்கப்பட்ட மணல் மேலும் குவியலாக வயல்வெளிகளில் கொட்டியதால், வாய்க்கால் இருக்கக்கூடிய இடமே தெரியாமல் பாசன கால்வாய் மூடி சுமார் 150 ஏக்கர் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை, பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை ஆகிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை சம்பந்தப்பட்ட விவசாயப் பகுதியில் வாய்க்கால் மண் முடி இருப்பதை சரி செய்யவில்லை. இதனால்,  கடந்த 3-ஆம் தேதி விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் பாசன கால்வாயில் தண்ணீர் வராதால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். இதுகுறித்து, இப்பகுதி விவசாயிகள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி வைத்துள்ளனர். இதற்கு அங்கிருந்து பொதுப் பணித் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்களும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், விவசாயிகள் போராட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து விவசாயி கந்தசாமி மற்றும் பிரகாஷ் கூறும்போது, கரட்டுப்பட்டி நாச்சிகுளம் பகுதியில் உள்ள விவசாயிகள்  சொந்த மாகவும் உழவடையாகவும், விவசாயம் செய்து வருகின்றோம். இந்த ஆண்டு ஆரம்ப காலத்தில் இருந்து எங்கள் கிராமத்தில் மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய் செல்வதற்காக பள்ளம் தோண்டி பின் சரிவர மூடாமல் விட்டு விட்டனர் . அவ்வாறு ,மூடும் போது அதில் தோன்றிய மண்ணை அருகில் உள்ள விவசாய கால்வாய் பகுதிகளில் கொட்டி விட்டு சென்றதால், விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய தண்ணீர் வரும் கால்வாய்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மோடி சேதம் அடைந்து விட்டது இதனால், விவசாயத்திற்கு செல்ல வேண்டிய தண்ணீர் செல்லாமல் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கரட்டுப்பட்டியில் இருந்து சோழவந்தான் பேட்டை ரயில்வே கேட் வரை தோன்டிய இடத்தில் பயன்படாத மண் குவியல்களை அப்புறப்படுத்தாமல், ஆங்காங்கே ஓரமாக ரோட்டோரமாக வாய்க்கால் இருக்கும் பகுதியில்குவித்து வைத்துள்ளதால், இந்த மண் விவசாய கால்வாய்களை மூடியுள்ளது. இதனால், கரட்டுப்பட்டியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் சுமார் 70 ஏக்கர் அளவுக்கு விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே, நடவடிக்கை எடுத்து விவசாயிகள் துயர் துடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். எங்கள் வயலின் அருகில் இருக்கக்கூடிய மரக்கிளைகள் விவசாய நிலத்தில் நிழல் பட்டு விலை நிலங்கள் பாதிக்கப்
படக்கூடிய நிலையில் உள்ளது . நாங்கள் கிளைகளை மட்டும் வெட்டி ரோட்டில் போட்டால் நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தையே வெட்டி
 விட்டதாக எங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர் . இன்று கரட்டுப்பட்டியில், இருந்து சோழவந்தான் வரை நூற்றுக்கு மேற்பட்ட பல லட்சம் பெறக்
கூடிய மிகவும் பழமை வாய்ந்த மரங்களை சொற்ப தொகைக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் கூறுகின்றனர் .
இது மட்டுமல்லாது, வரக்கூடிய காலம் மழைக்காலம் என்பதால், தொடர்ந்து மழை பெய்தால் ரோட்டோரம் குவிக்கப்பட்ட மண்ணை மழை தண்ணீர் அரித்து வயல்களை மூடக்கூடிய அபாய நிலையில் உள்ளது. மேலும், வாய்க்கால் ஏற்படும் அடைப்பு காரணமாக ஊருக்குள் தண்ணீர் புகுந்து வீடுகளுக்குள் சென்று சேதப்படுத்தும் அபாய நிலையில் உள்ளது. ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து விவசாயவாய்க்காலை சுத்தம் செய்து விவசாயங்கள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.

– நா.ரவிச்சந்திரன்