Save 20% off! Join our newsletter and get 20% off right away!

இலங்கை கடற்படை கப்பல் மோதிஉயிரிழந்த மீனவர்…குடும்பத்தினர் சாலை மறியல்

ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 400 க்கு மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள், கச்சத்தீவு
அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படை அத்துமிறி எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி துரத்திப் பிடிக்க சென்றபோது, கப்பல் விசைப்படகு மீது மோதியதில், படகு கவிழ்ந்து அதிலிருந்து நான்கு மீனவர்கள் கடலில் விழுந்தனர். இதில், இரண்டு பேர் உயிருடன் மீட்டு யாழ்ப்பாணம் மருத்து
வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரண்டு மீனவர்களை தேடும் பணியில் இருந்த போது ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரை யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், ஒரு மீனவரை தேடும் பணியில் இலங்கை கடற்படை  தேடி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை கடற்
படையை கண்டித்து இதுபோன்ற சம்பவத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்து, தற்போது மீனவர்கள் மீனவர் உறவினர்கள் துறைமுக பகுதியில்
சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி பதற்ற  சூழ்நிலை ஏற்பட்டது.

– நா.ரவிச்சந்திரன்