Save 20% off! Join our newsletter and get 20% off right away!

வீதிக்கு வீதி சொகுசு மதுபான கடைகள்

போதையில் மூழ்கும் புதுக்கோட்டை..

புதுக்கோட்டை என்றாலே தொண்டைமான் மன்னர்களால் ஆளப்பட்டு தனி சமஸ்தானம் என்ற பெருமையும் தனக்கென்று நாணயங்களை உருவாக்கிய கம்பீரமும், கொண்ட புதுக்கோட்டையில் புகழ்பெற்ற மிகவும் பிரபலமான விஷயங்களில் உடனே நினைவுக்கு வருவது 

உலக அதிசயமான சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்,

புகழ் பெற்ற வழிபாடு தரமான  பிரகதம்பாள் கோயில்,

ஆசிய கண்டத்தில் இரண்டாம் இடம் பிடித்த அரசு அருங்காட்சியகம்,

ஆங்கிலேயரை விரட்டியடித்த திருமயம் மலைக்கோட்டையில் உள்ள பீரங்கி என்று வரலாறு படைத்து புகழாரம் சூட்டிய புதுக்கோட்டையில்…

தற்போது மதுக்கடையினால் ஆதாயம் பெரும் அரசியல்வாதிகளாலும், மணல் மாஃபியா கும்பல்களாலும் மற்றும் இவர்களால் பயன்பெற்ற அல்லக்கைகள் உருவாக்கியும் மேலும் உருவாக்கப்பட உள்ள மனமகிழ் மன்றம் என்று மாற்றம் செய்யப்பட்டு வீதிக்கு வீதி

திறக்கப்படும் இந்த மதுக்கடையால்…

இனி  புதுக்கோட்டையில் பிரபலம் என்றாலே மது தான் என்று மக்கள் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது..

காரணம் வீதிக்கு வீதி திறக்கப்படும் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் விற்கும் சொகுசு மது 

உயர் தர  விற்பனை

24 மணி நேரமும்…

புதுக்கோட்டை நகரத்தில் இருப்பது வெறும் 42 வார்டுகளே.

 அதிலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் முக்கிய இடங்கலான புதிய பேருந்து நிலையத்தில் 2 அரசு டாஸ்மார்க் கடையுடன் கூடிய பார்களும், டிவிஎஸ் கார்னர் என்று சொல்லப்படும் இடத்தில் 2 டாஸ்மாக் பார்களும், பழைய பேருந்து நிலையம் எதிரில் 1 டாஸ்மாக் பாரும்,பழனியப்பா கார்னர் பிஎஸ்என்எல் ஆபீஸ் எதிரில் 1பாரும் வடக்கு ராஜ விதி புன்னகை மெடிக்கல் அருகில் 1டாஸ்மாக் பாரும் இருக்கிறது.

புதுக்கோட்டை நகரத்தில் எங்கு சுற்றினாலும் மக்கள் அன்றாட தேவைகளுக்கும்,பொருட்கள் வாங்கவும் மேலும் கோவில்கள், பள்ளிகள் போன்ற இடங்களுக்கும் மேற்கண்ட இடத்திற்கு தான் பொதுமக்கள்  வரவேண்டும். 

ஆகையால் அங்கு மொத்தம் 7 டாஸ்மார்க் பார்கள் உள்ளது…

மேலும் டிவிஎஸ் கார்னர் பகுதி என்று சொல்லப்படும் இடத்தில் 2 டாஸ்மாக் மதுக்கடைகளும்,1 எலைட் , FL2 கிளப் என்ற மது கடையும் உள்ளது?(அதற்கு நேர வரம்பே கிடையாது)

எனவே பொதுமக்களும், சமூக நல ஆர்வலர்களும், அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் இந்த மதுகடைகளையே வேண்டாம் என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்.மமேலும் இந்த மதுக்கடைகளை அகற்ற பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளனர்.

இந்த மதுக்கடைகள் வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில்….

மேலும் FL2  கிளப் பார்கள் டிவிஎஸ் கார்னர் அருகில் 1, புதிய பேருந்து நிலையம் எதிரில் டீம் ஹாஸ்பிடல் பின்புறம் 1, பழைய பேருந்து நிலையம் அருகில் எச்டிஎப்சி வங்கி  எதிரில் 1,  மற்றும் FL3 AAA  பார் டிவிஎஸ் கார்னர் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் தமிழ்நாடு ஹோட்டல் என்று சொல்லப்படும் இடத்திலும் அமைக்கபட்டுள்ளது.

குறிப்பு… FL3 AAA மாதிரியான பார்களில் உள்ள ஹோட்டலில் அங்கு தங்கியவர்களுக்கு மட்டுமே மது வழங்கலாம்.

FL2 கிளப் பார்களில் கிளப்பில் மெம்பர்ஷிப் ஆகிய நபர்களுக்கு மட்டுமே போதிய விதிமுறைகளுடன் மதுக்களை வழங்கலாம். ஆனால் புதுக்கோட்டையில் இங்கு அது நடப்பதில்லை. அங்கு  மது வாங்க குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக இரவு முழுவதும் திருவிழா கோலம் போல் காணப்படுகிறார்கள்.

இன்னும் தற்போது அதிகப்படியாக வீதிக்கு வீதி அதாவது காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஏரியா என்று ஒதுக்கப்படும் காந்தி நகர்,போஸ் நகர் பகுதியில் உள்ள அசோக் நகர் என்ற ஏரியாவில் ஹைவே ரோட்டில் எதிரே ஒரு புதிய பார் FL2 தயாராகி வருகிறது.மேலும் இன்னும் பல இடங்கள் அதாவது ரயில்வே ஸ்டேஷன் அருகில் அட்வான்ஸ்டு ஐடிஐ(மாணவர்கள் படிக்கும்)பக்கத்தில் ஒரு பாரும், மச்சுவாடி பகுதியிலும், திருவப்பூர் கோயில் சுற்றுவட்டார பகுதியிலும் வர இருக்கிறது.

மேலும் ஓலை குடிசையில் வாழும் மக்கள் ஏற்கனவே மாநகராட்சியாக ஆக்க வேண்டாம் என்று போராடிக் கொண்டு இருக்கும் இந்த நிலையில் ஒன்றியம்,ஊராட்சி பகுதியிலும் சில மதுபான கடைகள்( FL2 )திறக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த போக்கு வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களையும், நடுத்தர மக்களையும்  குடும்ப வாழ்வாதாரத்தையும் 

வஞ்சிக்கும் போக்காக மக்கள் கருதுகிறார்கள்…!!

-ஆலவாயர
உதவி: நியாஸ்