தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையானது பெய்து வருகிறது .
இந்த நிலையில், சோழவந்தான் பகுதியில்
கடந்த இரண்டு நாட்களாக இரவு 8 மணிக்கு மேல் கனமழை பெய்வதால் , இயல்பு வாழ்க்கை பாதிக்
கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். குறிப்பாக, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், திரௌபதி அம்மன் கோவில்
தெரு, பெரிய கடை வீதி பகுதி, மார்க்கெட் ரோடு பகுதி ஆகிய பகுதிகள் தாழ்வான பகுதியாக இருப்பதால், மழை பெய்தவுடன் மழை நீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்: சிறிதளவு மழை பெய்தாலே மழைநீர் குளம் போல்தேங்கி விடுகிறது. பேரூராட்சி சார்பில்,
மழை நீர் வடிகால் பணிகள் செய்திருந்தாலும், ஒரு சில இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக மழை நீர் வடிவது தாமதம் ஏற்படுகிறது. இதனால், தங்களின் வியாபாரம் பாதிக்கப்
படுகிறது. சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் முக்கிய வீதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய் செல்லக்கூடிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமி
ப்புகளை அகற்றி, மழை நீர் வெளியேற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர்.
– நா.ரவிசந்திரன்
Leave a Reply