Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சென்னை பேருந்து… பஸ் நிலையங்கள் அதிரடி மாற்றம்

சென்னையில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன
சென்னை போக்குவரத்து துறை சார்பில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு ஐந்தாயிரம் பேருந்துகள் தேவைப்படுகின்றன இதனால் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன
இதில் ஒரு கட்டமாக 1500 மின்சார பேருந்துகள் வாங்கப்படுகின்றன
இதன் மூலம் சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் இனி கூட்டம் இல்லாமல் படிக்கட்டுகளில் தொங்காமல் பயணம் செய்யலாம்
இதேபோல் சென்னைமாநகர பேருந்துகளில் அடுத்த நிறுத்தம் எது என்பது பற்றிய அறிவிப்புகள் தானியங்கி மூலம் இனி அறிவிக்கப்படும்
இது தவிர சென்னை மாநகரில் 71 பெரிய பேருந்து நிலையங்களும் 532 சிறிய பேருந்து நிறுத்தங்களும் உள்ளன
இவை அனைத்தும் நவீன முறையில் புதுப்பிக்கப்பட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன இதன் ஒரு கட்டமாக டிஜிட்டல் தகவல்பலகை வைக்கப்படுகிறது
இதன் மூலம் குறிப்பிட்ட நிறுத்தத்திற்கு பேருந்து எப்பொழுது வரும் தற்பொழுது எங்கு இருக்கிறது என்பது போன்ற தகவல்களை பயணிகள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்
இந்த டிஜிட்டல் தகவல் பலகை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இருக்கும் எனவே வெளி மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கும் இந்த தகவல் பலகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது
மேலும் பேருந்துகளில் தானியங்கி டிக்கெட்டுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன
சென்னையில் பேருந்து நிலையங்களை அகலப்படுத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன இதன் மூலம் கூடுதலான பயணிகள் பேருந்து நிறுத்தங்களில் அமர்வதற்கும் நிற்பதற்கும் வசதிகள் செய்யப்படுகின்றன
இதற்காக சுமார் 130 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் அனைத்தும் உலக தரத்திற்கு உயர்ந்த நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் இப்பொழுதே தொடங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது