இந்தியாவின் முதல் தேர்தல் 1952 இல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிரதான கட்சியாக இருந்தாலும் கூட அதற்கு நிகரான ஒரு எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி விளங்கியது யாரும் மறுக்க முடியாது. தமிழகத்தில் நடைபெற்ற முதல் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் 152 இடங்களில் போட்டியிட்டு 68 இடங்களில் வெற்றி பெற்றது. இது ஒரு பிரம்மாண்டமான வெற்றி என்று சொல்லலாம். அதன் பின்னர் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 68 இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களை மட்டுமே பெற்றது கம்யூனிஸ்ட் கட்சி. திமுக 14 இடங்களில் வெற்றி பெற்று எனது இருப்பை தக்க வைத்துக் கொண்டு அசுர வளர்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கு காரணம் தொழிலாளர்கள் இதை யாரும் மறுக்க முடியாது. அவர்களுக்கு நேர் எதிராக நின்றவர்கள் பண முதலைகள் முதலாளிகள்.
கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்கள் பிரச்சினையை கையில் எடுத்த நேரத்தில் தான் திமுக மொழி பிரச்சினையை கையில் எடுத்து வளர்ச்சி அடைந்தது. கம்யூனிஸ்டுகளின் தொடர் போராட்டம் நாளுக்கு நாள் வலுவிழந்து போனது என்று சொல்லலாம் மக்களுக்கான பிரச்சினையை மக்களுக்கு புரியாத மொழியில் பேசியது தான் கம்யூனிஸ்டுகளின் இந்த தேய்வுக்கு காரணமாக அமைந்தது. ஆனால் தமிழகத்தில் கூலித் தொழிலாளிகள் விவசாய தொழிலாளர்கள் உயர்வுக்கு வித்திட்டவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதில் கொஞ்சம் ஐயமில்லை இந்த நிலையில் தான்
கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் நுகர்வு கலாச்சாரத்துக்கு தங்களை மாற்றிக் கொண்டதனால் கம்யூனிஸ்டுகளின் மொழி அவர்களுக்கு புரியவில்லை என்று சொல்லலாம். அப்பழுக்கற்ற தலைவர்களாக ஜீவா, ராமமூர்த்தி, மணலி கந்தசாமி, சங்கரய்யா, நல்லகண்ணு போன்றவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வளர்ச்சியில் தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டனர். பிற்காலத்தில் வந்த தலைவர்கள் அப்படி இல்லை என்று சொல்லுவதை விட தங்களையும் நுகர்வு கலாச்சாரத்திற்கு மாற்றிக் கொண்டனர்.
எளிமையாக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் திராவிட கட்சிகளை போல தங்களை உருவாக்கிக் கொண்டது தான் மக்களிடமிருந்து அவர்கள் விலக்கப்பட்டதற்கான காரணம் என்று அறிய முடிகிறது. என்னதான் தியாகத்தலைவர் என்று நல்லகண்ணை சொன்னாலும் கூட அவர் மூன்று முறை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார் என்பதை யாரும் மறுத்து விட முடியாது அதற்கான காரணத்தை கம்யூனிஸ்டுகள் கொஞ்சம் கூட மறுபரிசீலனை செய்து பார்க்கவில்லை. அந்த தலைவர்களின் தியாகத்தை இளைய தலைமுறைகளிடம் எடுத்துக் கூறாதது கம்யூனிஸ்டுகளின் இந்த தோய்வுக்கு காரணமாக அமைந்தது.
தமிழகத்தில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்க முடியாத காலம் போய் கம்யூனிஸ்டுகளை கண்டு கொள்ளாத காலமாக மாறிப்போனது உண்மை. இந்த நிலையில் தான் விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24 ஆவது மாநில மாநாட்டை மிக வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சோர்ந்து போய் கிடந்த கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் விடிவுகாலம் பிறக்காதா என்று ஏங்கிக் கிடக்கும் தொழிலாளர்களுக்கும் புது ரத்தம் பாய்ச்சி இருக்கிறது விழுப்புரம் மாநாடு. நிர்வாகிகள் கூட்டமாக இருந்தாலும் பொது கூட்டமாக இருந்தாலும் கூட பிரம்மாண்ட கூட்டமாக அமைந்தது. பிரகாஷ்காரத் போன்ற தேசிய தலைவர்கள் பேச்சு விழுப்புரம் மாநாட்டில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது. பிரகாஷ்காரத் பேசும்போது தமிழ்நாட்டு அரசியலை விட்டு வைக்கவில்லை அதுவும் தற்போது திமுக ஆட்சியின் மீது அவருக்கு ஏற்பட்டிருந்த கோபத்தை வெளிப்படுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு வந்திருக்கிறார் தொழில் தொடங்குவது நாட்டின் வளர்ச்சிக்கு சரி ஆனால் அவர்கள் சொல்லுகிற எல்லா காரணத்திற்கும் தலையாட்டிவிட்டு எப்படி வரலாம். மேற்குவங்க அரசு பொறுப்பேற்று இருந்த ஜோதிபாசுவும் வெளிநாடு சென்று இருந்தார் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு தொழில் வளர்ச்சியை மேற்கொளங்கு மாநிலத்தில் உற்பத்தி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார் அதற்கும் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது ஜோதிவாசி புரிந்துணர் ஒப்பந்தம் போடுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் எங்கள் மாநிலத்தின் தொழிலாளர் நல சட்டங்களுக்கு உட்பட்டு தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்பதில் கராராக இருந்தார். இப்படி பிரகாஷ் காரத் பேசும்போது ஒரு மிகப்பெரிய உற்சாகம் ஏற்பட்டது போல கம்யூனிஸ்டுகள் ஆரவாரம் செய்தார்கள். பிரகாஷ் காலத்தின் பேச்சு திமுக கூட்டணிக்கு வைத்திருக்கிற ஆப்பு என்கிற முடிவுக்கு வந்து விட்டார்கள் தொண்டர்கள். இளைஞர்கள் மத்தியில். அதன் விளைவு தான் பெ சண்முகம் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம். பெ. சண்முகம் மக்களுக்கான போராளி அதற்காக பல்வேறு நிகழ்வுகளை காரணம் சொல்லலாம் குறிப்பாக ஒரு நீதிமன்றத்தில் தோள் மீது இருக்கிற துண்டை எடுக்க சொன்ன நிகழ்வு தான் அவருடைய போராட்ட குணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.
“எந்த சட்டம் சொல்லியது தோள் மீது துண்டு போடக்கூடாது என்று இடுப்பில் கட்டி இருந்த துண்டை தோலுக்கு கொண்டுவர நாங்கள் எவ்வளவு போராட்டம் நடத்தினோம் என்பது எங்களுக்கு தான் தெரியும்”என்று அவர் அளித்த பதில் அவரது போராட்ட குணத்தையும் அவர் ஒரு தூய்மையான கம்யூனிஸ்ட் என்பதையும் வெளிப்படுத்தியது மாணவர் கம்யூனிஸ்ட் அமைப்பிலிருந்து வளர்ந்து வந்தவர் சண்முகம் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒரு மாற்றம் வேண்டும் என்கிற வெளிப்பாடுதான் விழுப்புரத்தில் கூடிய கூட்டம் என்று கூட சொல்லலாம்.
புதிதாக மாநில செயலாளர் பொறுப்பேற்றுக் கொண்ட சண்முகம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் போராட்டங்களை ஒதுக்குகிற செயலுக்கு ஒரு மிகப்பெரிய கண்டனத்தை தெரிவித்து இருந்தார் அது மட்டும் அல்ல மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை தொழிலாளர் வினோதப் போக்கு திமுகவும் கடைபிடிக்குமேயானால் அதையும் எதிர்க்க தயங்க மாட்டோம் என்கிற ரீதியில் அமைந்திருந்தது அவரது பேட்டி.
ஒட்டுமொத்த நிர்வாக குழுவையும் மாற்றியமைத்து இருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. திமுகவிற்கு சொம்பு தூக்குவது தான் பாலகிருஷ்ணனின் வேலை என்று பலர் சொல்லுகிற செயல் ஒட்டுமொத்த கம்யூனிஸ்டுகளையும் அவமானப்படுத்துவதாகவே கருதப்படுகிறது. அப்படி பாலகிருஷ்ணனுக்கு திமுகவுக்கு சொம்பு தூக்குகிற அளவிற்கு மோசமான நபர் இல்லை என்பதை எல்லோரும் அறிவார்கள் கம்யூனிஸ்டுகளை ஏதோ பேச வேண்டும் என்பதற்காக சில பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. 2026 தேர்தல் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கிறது. அந்த மாற்றம் கூட்டணி மாற்றி அமைக்கப்படுவதால் ஏற்படும் என்பதையும் அரசியல் ஆய்வு அறிஞர்கள் கணக்கில் கொண்டு இருக்கிறார்கள். 1952 இல் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து போன கம்யூனிஸ்ட் 2026 தேர்தலில் வளர்வதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதாகவே காட்டுகிறது விழுப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று நாள் மாநாடு. மாற்றம் அமைய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கருத்தாகவும் இருந்து வருகிறது அது கம்யூனிஸ்டுகளால் நிகழ்ந்தால் வரவேற்போம் அப்படி நிகழ்ந்தால் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு ரெட் சல்யூட்.
-பா.ஜோதிநரசிம்மன்
Leave a Reply