தமிழகத்தில் திமுக அரசுக்கு தினமும் தொல்லை தருவது பாஜக மற்றும் அதிமுக என்றால் மிகையில்லை. அந்த வகையில் கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என பல சிக்கல்களை திமுக அரசு சந்தித்து வருகிறது. அண்ணாமலை தமிழக பாஜக தலைவரான பிறகு தினமும் ஒரு அறிக்கை விடுவது தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. குறிப்பாக அண்ணாமலை.. விதைத்துள்ள கலவர விதைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதி ல் சில,
தமிழ்நாட்டில் பணிபுரியும் பிஹாரி தொழிலாளர்கள் தமிழர்களால் தாக்கப் படுகிறார்கள் என்ற காணொளி.
ஒரு ராணுவ வீரரின் மனைவியை பலரும் சேர்ந்து தாக்கினார்கள் என்று காணொளியை பரப்பினார் . அது பொய் என்று நிரூபிக்கப்பட்டது.
மைக்கேல்பட்டி மாணவியின் காணொளியை பரப்பி மதமாற்றத்தினால் அவள் தற்கொலைக்கு முயன்றாள் என்றது . சித்தி கொடுமையால் தற்கொலைக்கு முயன்றாள் என்று நிரூபிக்கப்பட்டது.
விலை உயர்ந்த ரபால் கை கடிகாரத்தை கட்டிகொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த கடிகாரத்தின் விலையை பற்றி கேள்வி எழுந்தவுடன், கைகளால் எழுதப்பட்ட ஒரு வீஸீஸ்ஷீவீநீமீ ஐ காட்டி இது தான் அந்த கடிகாரத்தின் விலை என்று கூறியது,
திமுக ஆட்சிக்கு வந்ததே 1967 ல் தான் என்பது கூட தெரியாமல். மருதமலை கோவிலில் 1962 வரை மின்சாரம் வராததிற்கு திமுக தான் காரணம் என்றார் .
1956 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிகழ்ச்சியில் நாத்திகம் பேசியதால் முத்துராமலிங்க தேவரின் கோபத்திற்கு பயந்து அறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்டார் என்ற செய்தி ஹிந்து நாளிதழில் வந்தது என்றார்.டி .ஆர். பாலு 100 ஆண்டு கால பழமையான கோவில்களை இடித்ததாக கூறினார். தமிழ்நாடு உளவுத்துறையில் 60% மேற்பட்டவர்கள் மாற்று மதத்தினர் என்றார் . வெறும் 18% மட்டுமே மாற்று மதத்தினை சேர்ந்தவர்கள் என்றதும் பின் வாங்கினார். இதுவரை 20000 நூல்களை படித்துள்ளதாக தெரிவித்தார் .அதுவும் பொய் என தெரிந்தது. இப்படிப்பட்ட அண்ணாமலைபோல ஆளுநர் ரவியும் தொல்லை கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், அவர் மகன் கதிர் ஆனந் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ள வீட்டில் துரை முருகன், அவர் மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்
துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோருக்குச் சொந்தமான வீடு, கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.இதில், அமைச்சர் வீட்டில் எந்த ஆவணங்களும் கிடக்காத நிலையில், கடைசியாக கிங்ஸ்டன் கல்லூரியில் நடந்த 44 மணிநேர சோதனையை முடித்துவிட்டு, 9 கார்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள், கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் பணத்துடன் வெளியே சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது.
இதற்கிடையில் (ஜன.4) சனிக்கிழமை, அமைச்சர் துரைமுருகன் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.. சோதனைக்கிடையில் அவர் டெல்லி சென்றது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தெரிவிக்காததால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் , விமானம் மூலம் கடந்த
5ஆம் தேதி சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “துறை ரீதியான வேலைக்காக டெல்லி சென்றிருந்தேன். அமலாக்கத்துறை சோதனை என்பது எனக்கு பழக்கப்பட்டது. எனவே, அமலாக்கத்துறை சோதனைக்கும் நான் டெல்லி சென்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று தெரிவித்தார். ஆனால் அவர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டுக்கு பின் சென்ற டெல்லி பயணத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திமுவில் துரை முருகன் குறித்து அதிருப்தி நிலவி வருகிறது. மண் கொள்ளை தொடர்பாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. மேலும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதில் அவருக்கு துளி கூட விருப்பமில்லை. அதிலும் வன்னியர் சமுதாயத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என கூறி ,மூத்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்காதது ஏன் என சமூக வலை தளங்களில் பெரிதாக பேசப்பட்டது. இதில் அவருக்கு பங்கு உள்ளதாக மேலிடம் சந்தேகப்பட்டது. எனவே துரை முருகன் விஷயத்தில் அறிவாலயம் அத்தனை எதிர்வினை காட்டவில்லை. இதனால் அப்செட்டான துரை , முதல்வர் காதில் விஷயத்தை போட அவரோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனவேதான் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். இதில் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர் ஜகத் ரட்சகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெகத்ரட்சகனுக்கு டெல்லியில் நல்ல செல்வாக்கு உள்ளது. குறிப்பாக பொன்முடியை காப்பாற்றியவர் இவர்தான். எனவே டெல்லி சென்ற துரைமுருகன், மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரஹோத்தகி உள்ளிட்ட சிலரை சந்தித்து ஆலோசித்து விட்டு திரும்பியிருக்கிறார் .அப்போது அவரிடம் வழக்கறிஞர்கள் சிலர்,
அமலாக்கத் துறை சம்மன் அனுப்பினால் கதிர் ஆனந்தை ஆஜராகச் சொல்லுங்கள் என அறிவுரை கூறினர் . இதனால் நிம்மதி அடைந்த துரை முருகன் சென்னை வந்தார். மீண்டும் அவர் டெல்லி செல்வார் என தெரிகிறது.
இந்த விவகாரம் குறித்து தேமுதிக தலைவர் பிரேமலதா கூறும்போது,
துரைமுருகன் வீட்டில் ரெய்டுக்கு சென்றது ரொம்பவும் லேட். இது முன்னரே நடந்திருக்க வேண்டும். ரொம்ப, ரொம்ப தாமதமாக நடந்திருக்கிறது. அந்தளவுக்கு இன்று ஊழல் தலைவிரித்தாடுகிறது.அவர் (துரைமுருகன்) யாரை சரி கட்ட டில்லி செல்கிறார் என்று தெரியவில்லை. ரெய்டு செல்வது பிரச்னையில்லை. ஆனால் என்ன ஆவணங்கள் எடுக்கப்பட்டு உள்ளன என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும். தப்பு செய்பவர்கள் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும் என கருத்து கூறியுள்ளார்.
கருணாநிதி காலத்தில் இருந்த செல்வாக்கு இப்போது துரை முருகனுக்கு இல்லை .காரணம் கட்சியில் இளையோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே இந்த சோதனையை தலைமை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் துரை முருகன் அதிர்ச்சி அடைந்துள்ளார் .
-ஆர்.அருண்
Leave a Reply