இருபத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகு பர்கூர் சட்டமன்ற தொகுதி நினைத்த பொழுதெல்லாம் பரபரப்பை அனுபவித்து கொண்டிருக்கிறது. காரணம் இப்போதைய திமுக எம்எல்ஏ மதியழகன்! பர்கூர் தொகுதிக்குள் ஆம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெரிய தொழிலதிபர் தன்னுடைய பணத்தில் ஒரு பகுதியை ரஜினி ரசிகர் மன்றத்திற்கு செலவழித்துக் கொண்டிருந்தவர் ஒரு சுபதினத்தில், சுற்றுபக்க மாவட்டங்களை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரசிகர்கள் என இருபதாயிரம் பேரை கூட்டிகிட்டு வந்து கிருஷ்ணகிரியில் பிரமாண்ட விழா எடுத்து மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஞானஸ்தானம் எடுத்துக் கொண்டார். தமிழகமே திரும்பி பார்த்தது மதிழயகன் திமுகவில் ஐக்கியமான விழாவை! கட்சிக்குள் வந்த புதிதில் பட்டும்படாமலும் இருந்த மதியழகனை, திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் வருகை மனதை மாற்றி தீவிர அரசியல் பண்ண வைத்தது மூன்று வருடங்கள் கடந்துவிட்டது கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் மீது நிர்வாகிகளும் தொண்டர்களும் வெறுப்பில் இருக்க, மதியழகனை மாவட்ட செயலாளராக்கும் முயற்சிகள் நடந்தது ஆனால் விவசாய அணியில் மாநில அளவில் பொறுப்பை கொடுத்து மதியழகனை சமாதானப்படுத்தினர். அடுத்து எம்பி தேர்தல் வரும்போது எம்பி சீட் உனக்குத்தான் என்று சொல்லி வைத்தனர். அதுவும் நழுவிப்போக, அடுத்து எம்எல்ஏ தானே? மதியழகன் கிருஷ்ணகிரி தொகுதியை கேட்க, பர்கூர் தொகுதி ஒதுக்கப்பட்டது முன்னாள் எம்பிகள் வெற்றிச்செல்வன் சுகவனம், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் எம்எல்ஏ சீட்டு கேட்டு அடம் பண்ண, மதியழகனுக்குத்தான் சீட்டு போய் வேலை செய்யுங்கனு சொல்லி அனுப்பிவிட்டது திமுக தலைமை.
பர்கூர் தொகுதி முழுக்க கோடிகளை கொட்டி இறைத்த மதியழகன் வாக்காளர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார். எம்எல்ஏ ஆன மதியழகன் கட்சித் தலைமையில் தலைவர் மு.க.ஸ்டாலின் அவருடைய மாப்பிள்ளை சபரீசன் ஆகியோருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். மந்திரி சபை பட்டியல் தயாராகும்போது மதியழகனின் பெயர் பரிசீலிக்கப்பட, இன்னொரு பக்கம் மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் தொகுதி எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் முதல்வர் மு.க.ஸ்டாலின் சகோதரி செல்வி மூலம் தனக்கு மந்திரி பதவி கேட்டு நெருக்கடி கொடுக்க, அடுத்த மந்திரிசபை மாற்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று பெண்டிங்ல போட்டுட்டாங்க. மதியழகன் எதிர்பார்க்கிறாரோ இல்லையோ? பர்கூர் தொகுதி மக்களும், கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுகவினரும் எதிர்பார்க்கின்றனர். தொகுதிக்குள் எல்லா நிகழ்ச்சிகளிலும் திமுகவினர் தொகுதி மக்கள் புடைசூழ மதியழகனை அடிக்கடி பார்க்கலாம். தேர்தல் வாக்குறுதிகளை சட்டமன்றத்தில் பேசி இருக்கிறார். தொகுதிக்குள் அதிமுகவினர் வந்து உதவி கேட்டாலும் செய்கிறார் இதை திமுகவினர் விரும்பவில்லை. மதியழகனை பார்க்கனும்னா தொகுதியில் எம்எல்ஏ அலுவலகத்தில் பார்க்கலாம், கிருஷ்ணகிரி வீட்டிலும் பார்க்கலாம். மாவட்டத்தில் திமுகவினர் மத்தியில் மதியழகன் கை ஓங்கி இருக்கிறது மாவட்ட செயலாளர் பதவி போய்விடும் போலிருக்கிறதே என்கிற பயத்தில் இருக்கும் செங்குட்டுவன், மதியழகனுக்கு எதிராக நிறைய மறைமுகமாகவும் நேரிடையாகவும் பெயரைக் கெடுக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். இதை உளவுத்துறை ஆட்சி பீடத்திற்கு நோட் போட்டிருக்கிறது. திமுகவினர் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்து இருக்கிறார் இதை வேண்டுமானால் நூறுநாள் சாதனையாக சொல்லலாம்.
ஜெயலலிதாவுக்கு பிறகு மீண்டும் பரபரப்பாக இருக்கும் பர்கூர் தொகுதி!
