Save 20% off! Join our newsletter and get 20% off right away!

உளுந்தூர்பேட்டை-ஊராட்சிகளின் நிர்வாகத்தில் …ஒன்றிய செயலாளர், அதிகாரிகள் தலையியீடு…தலைவர்கள் புலம்பல் …

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் 53 கிராம ஊராட்சிகள் உள்ளது இந்த ஊராட்சிகள் நிர்வாகத்தில் அதிகாரிகள் தலையிடுவதோடு ஊராட்சியில் நடைபெறும் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒப்புதல் இன்றி அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பணிகளை வழங்குவதாகவும் ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகளுக்கு கையூட்டு அதிகளவில் கொடுப்பதால் சாலை கட்டிடம் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளை தரமற்ற முறையில் செய்து வருவதாகவும் அதனை தவிர்க்க உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் வளர்ச்சிப் பணிகளை செய்ய அதிகாரிகள் முன் வர வேண்டும் மேலும் இது பற்றி கேட்கும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பி ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவிகளை தகுதி நீக்கம் செய்வோம் என மிரட்டி வருவதாகவும் இதற்கு ஆளும் கட்சியினர் தூண்டுதல் இருப்பதாகவும் அதனை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட வந்தனர் அப்பொழுது ஊராட்சி மன்ற தலைவர்களின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஊராட்சி மன்ற தலைவர்களை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தினர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது தொடர்ந்து இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்பு ஊராட்சி மன்ற தலைவர்களை அழைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் பேச்சுவார்த்தை நடத்தினார் அதில் இனிவரும் காலங்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் வளர்ச்சிப் பணிகள் செய்யப்படும் என்று அதிகாரி உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டதுஞ்
பஞ்சாயத்து தலைவர்களின் குமுறல்
பஞ்சாயத்து தலைவர்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றால் புரோக்கர் சிவசங்கரன் சொன்னால்தான் வேலை நடக்குது சார் உளுந்தூர்பேட்டை ஙிஞிளி வுக்கு இங்க வேலை இல்ல சார் சிவசங்கரன்  காலைல வந்து ஆபீஸை திறப்பாரு அலுவலகத்தில் எத்தனை ஏ.எஸ் வந்திருக்குன்னு அவர்தான் பார்ப்பாரு ஒன்றிய செயலாளருக்கு போன் பண்ணி தகவல் சொல்லுவாரு அதுக்கப்புறம் ஙிஞிளிக்கு தகவல் சொல்லுவாரு அப்புறம் அப்படியே பேசி அங்கங்க புரோக்கர்களை வைத்து வேலையை பிரிச்சு வித்துருவாங்க சார்,
நான் பில்லூர் தலைவர் சார் நான் இதுவரைக்கும் வந்ததுல இருந்து எந்த வேலையும் எடுத்து செஞ்சது இல்லை இந்த அலுவலகத்துக்கு வந்தா என்ன ஒரு பஞ்சாயத்து தலைவரா மதிக்கிறது கூட கிடையாது இந்த ஏ.ஜி.எம்.டி வேலை என்.ஆர்.ஜே வேலை எதுவுமே நான் எடுத்து செஞ்சது கிடையாது அப்புறம் எப்படிங்க ஊரு மக்கள் ஓட்டு போட்டவங்க எங்களை மதிப்பாங்க கெஞ்சிக்கூட பாத்துட்டோம் பஞ்சாயத்துல மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும் சார் எதாவது ஒரு பாலமும் கழிவு நீர் சாக்கடையோ ஏதாவது ஒரு வேலையை கொடுங்க கெஞ்சி பார்த்தாலும் இங்க வந்து வேலையை செய்வதற்கு வாய்ப்பு இல்லை சார், ஙிஞிளி யேவை நேர்ல பார்த்து பஞ்சாயத்து தலைவர்கள் ஆனா நாங்க வேலை ஒதுக்கீடு செய்ய வேண்டும் மனு கொடுத்தா அதெல்லாம் தர முடியாது என்ன பண்ண முடியுமா பண்ணிக்கோ! உரிமையை கேட்டா?இந்த பாருங்கப்பா இது மாதிரி அராஜகம் பண்ணீங்கன்னா பஞ்சாயத்து தலைவர் உங்க மேல ஒழுங்கு நடவடிக்கை அப்படி இல்லன்னா 205,302வழக்கு போட்டு உள்ள தள்ளிடுவேன் புரியுதா அதிகார தோரணையோடு மிரட்டுறாங்க சார் இத பாருங்க சார் இந்த ஒன்றிய செயலாளர் ராஜவேலு வைத்தியநாதன் இவங்க பேச்சைக் கேட்டுகிட்டு ரொம்ப ஆடுறீங்க சார் பாவம் ஏழை மக்கள்அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு பஞ்சாயத்து தலைவர்கள் நாங்க வருத்தப்பட்டு இருக்கோம்.
காட்டுநெமிலி  கிராம பகுதிங்க அங்க குளம் வேலை செய்வது அந்த பஞ்சாயத்து தலைவருக்கு தகவல் தெரியாது அந்த வேலையை செய்றவர் வேல்முருகன் அப்படின்ற ஒரு தனிநபர் வேலையை செய்கிறவர் வெண்டாரும் கிடையாதுஅரசு ஒப்பந்ததாரராகவும் இருக்காரா என்று தெரியாது,  அவருக்கு ஒன்றிய செயலாளர் இந்த வேலையை ஒதுக்கீடு செய்து கொடுத்திருக்கிறார் பஞ்சாயத்து நிர்வாகத்தில் ஒரு மூணாவது நபர் வந்து எப்படி சார் ஒரு வேலையை செய்யலாம் என்ற வாக்குவாதத்திலும் பஞ்சாயத்து தலைவர்கள் ஈடுபட்டனர் வட்டார வளர்ச்சி அதிகாரியை பார்த்து சார் இந்த வேலையெல்லாம் நீங்க ஒதுக்கீடு செஞ்சு கொடுக்கல அப்படின்னா நீங்க ஒரு லெட்டர் குடுங்க சார் சம்பந்தப்பட்ட கட்சி காரங்க மேல நடவடிக்கை எடுக்க சொல்லி நாங்க போலீஸ்ல புகார் கொடுக்கிறோம் என்று கூட்டமைப்பின் தலைவர் கூறினார் மேலும் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரம் பஞ்சாயத்துகளுக்கும் சேர்த்து எந்தெந்த வேலைகள் யாரால் எப்படி செய்யப்பட்டுள்ளது என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்று வைத்திருக்கிறேன் சார் அத படிச்சு பாருங்க என்று ஙிஞிளி விடம் காண்பித்தார்,மூணாவது நபர் பஞ்சாயத்துக்குள்ள புகுந்து வேலைகளை செய்யும்போது கிராம சபை கூட்டம் நடத்துனீங்கன்னா அந்த கூட்டத்தில் தணிக்கை குழுவுக்கு யார் சார் பதில் சொல்றது,
மேலும் கூட்டமைப்பு தலைவர் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பேச்சுவார்த்தையின் போது இந்த மாதிரி வேலைகளை எல்லாத்தையும் தனி நபருக்கு பிரித்து கொடுக்கிறது ஏத்துக்க முடியாது சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவருக்கு வேலைகளை ஒதுக்கீடு செய்வதில்லை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் அதுக்கு தான் இன்னைக்கு நாங்க மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதற்கு வந்தோம் காவல்துறையை வைத்து போராட்டத்தை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தைக்கு கூப்பிட்டீங்க இருக்கிற 53 பஞ்சாயத்துக்கும் தலைவர்களுக்கு வேலையை பிரிச்சு அரசு ஒப்பந்தத்தின்படி ஒதுக்கீடு பண்ணுங்க என்று பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தெரிவித்தனர்
வட்டார வளர்ச்சி அதிகாரி பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர்களை பார்த்து கடந்த ஆண்டு ஏதோ நடந்து போச்சு இந்த ஆண்டுக்கான டெண்டர் வேலைகளை பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலையில் சரியா பிரிச்சு கொடுத்துடுவோம் இதுல ஒன்னும் தப்பு நடக்காது எனவே போராட்டத்தை கை விடுங்க அடுத்த வருடம் எந்த தவறெல்லாம் நடக்காமல் இருக்கலாம் என்று கூறியதோடு ஒரு வழியாக பஞ்சாயத்து தலைவர்கள் பெருமூச்சுவிட்டு கூட்டத்திலிருந்து கலைந்து சென்றனர்
தமிழ்நாடு பஞ்சாயத்து தலைவர் கூட்டமைப்பில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் இருப்பதால் ஆளுங்கட்சியை சேர்ந்த சில பஞ்சாயத்து தலைவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்ததோடு ஆளும் கட்சியைச் சார்ந்த அரசியல் பலம் படைத்தவர்கள் இந்த கூட்டம் நடைபெறாமல் இருக்க போராட்டத்திற்கு வரும் பொது மக்களையும் பஞ்சாயத்து தலைவர்களையும் முன்கூட்டியே கைபேசி மூலம் தகவல்கள் அனுப்பியும் மிரட்டியும் போராட்டம் நடைபெறாமல் பார்த்துக் கொண்டனர் காவல்துறையின் கிடக்கு பிடிய கட்டுப்படியும் அதிகமாக இருந்ததால் சற்று அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டு அலுவலகத்தில் இருந்து இரும்பு கதவுகளும் மூடப்பட்டது பின்னர் ஒவ்வொரு பஞ்சாயத்து தலைவராக பஞ்சாயத்து தலைவர் தானா என உறுதி செய்து பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் ,ஜனநாயக ரீதியாக வாக்கெடுப்பு நடத்தி பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பஞ்சாயத்து ராஜ் அடிப்படையில் உரிமைகள் வழங்காமல் அரசியல் ரீதியாக இவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியினை அரசியல் கட்சி தலைவர்கள் என்ற போர்வையில் அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு கிடைக்கக்கூடிய அனைத்து நிதிகளையும் கட்சித் தலைவர்கள் முடக்குவது நியாயமா என்ற குமரகுளோடு வேதனையை வெளிப்படுத்திக் கொண்டு கலைந்து சென்றனர் பஞ்சாயத்து தலைவர்கள்
என்று பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் மனதில் இருந்த குமரல்களைக் கொட்டி தீர்த்தனர்

*குறிப்பாக உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட குணமங்கலம் கிராமத்தில் எட்டாத குலத்திற்கும் போடாத சாலைக்கும் அமைக்காத நர்சரி கார்டனுக்கும் ஒட்டு மொத்தம் சுமார் 50 லட்சம் வேலை செய்யாமலேயே எல்லா பணத்தையும் எடுத்துட்டாங்க எங்களுக்கு இது தெரியாது ஆண்டு தணிகை என்பது தான் இந்த விவரம் தெரிய வருது இதுக்கு அதிகாரிகளின் உதவியோடு தான் இவை அனைத்தும் நடக்கிறது கிராம பஞ்சாயத்து ஊராட்சி அலுவலர் ராஜேந்திரன் எங்க ஊராட்சி கிழக்கு துணை ஊராட்சி ஒன்றிய அலுவலர் அலுவலர் இவ்ளோ மோசம் செய்யறாங்க எல்லாம் இதுக்கு பின்னாடி இந்த திமுக அரசியல்வாதி தான் இருக்காங்க எல்லாம் தெரிஞ்சும் மாவட்ட கலெக்டருக்கு புகார் கொடுத்து இருக்கேன் முதல்வர் சிஎம்க்கு தனி செல்லுக்கு புகார் கொடுத்து இருக்கேன் எந்த நடவடிக்கையும் இதுவரைக்கும் எடுக்கல சார் என புலம்பும் குணமகால ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் புலம்பி தீர்த்து இருக்கிறார் இதுபோல இங்க மட்டுமாங்க பிரச்சனை உளுந்தூர்பேட்டை தொகுதி முழுக்க இதே நிலைமை தாங்க இதைப்பற்றி எம்எல்ஏவும் கண்டுக்க மாட்டாரு அவங்களுக்குள்ள ஒரு ஒப்பந்தமும் போட்டு இருக்காங்க பின்னால பொறுப்பு அமைச்சர் ஏ.வா.வேலு  மாவட்ட  செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் உதவியோடதான் எல்லாம் நடக்குது என்கின்றனர்.

– இரா.நந்தகோபாலகிருஷ்ணன்