– கள்ளக்குறிச்சி டென்ஷன்
பாராளுமன்ற தேர்தல் முடிந்து, வென்றவர்கள் பதவி ஏற்று மக்கள் பணியை தொடங்கிவிட்டனர். தோற்றவர்கள் செலவு தொகையை எப்படி எடுப்பது என்கிற ஆழ்ந்த சிந்தனையில் இறங்கிவிட்டனர். எம்பி சீட் எதிபார்த்து கிடைக்காதவர்கள் இவர்தான் காரணம் அவர்தான் காரணம்னு வாய்ப்பந்தல் போட்டு வம்பு சண்டைகளை வளர்த்து, அடிதடியில் இறங்கி மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிடுகின்றனர். அப்படி நடந்த சமீபத்திய நிகழ்வு கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தொடர்ந்து மூன்றுமுறை எம்எல்ஏவாக இருந்தவர், நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோற்றவர். வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளராக இருப்பவர் கிருஷ்ணன் இவர் குமரகுருவின் தீவிர ஆதரவாளர். குமரகுருவின் அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளையும் கிருஷ்ணனின் போஸ்டர், பேனர், நாளிதழ் விளம்பரங்கள் கொடி தோரணங்கள் என அடையாளப்படுத்தும் கால் நூற்றாண்டாக குமரகுருவை பின் தொடரும் கிருஷ்ணனுக்கு எம்பிக்கு நிற்க வேண்டும் என்பது தீராத ஆசை. அதை குமரகுருவிடம் சொல்ல, காமராஜர் ஸ்டைலில் அதற்கென்ன ஆகட்டும் பார்க்கலாம் என்று பதில் சொல்லி உற்சாகப்படுத்த கிருஷ்ணன் விழுப்புரம் தனி தொகுதி எம்பியாகவே தன்னை பாவித்துக்கொண்டு வாழ ஆரம்பித்திருக்கிறார்.
வேட்பாளர் பட்டியல் வெளியானபோது விழுப்புரத்திற்கு பாக்கியராஜ் பெயரும், கள்ளக்குறிச்சிக்கு குமரகுரு பெயரும் இடம்பெற்றிருந்தது. அதிர்ச்சியில் உறைந்தார் கிருஷ்ணன். தேர்தல் முடிவில், விழுப்புரத்தில் பாக்கியராஜும், கள்ளக்குறிச்சியில் குமரகுருவும் தோற்றுப்போக, தோல்விக்கான காரணங்களை தேட ஆரம்பித்தனர். பாக்கியராஜ் குமரகுரு இருவரும் வெற்றி பெறுவார்கள் என்று பேசப்பட்டவர்கள். அதிலும் குமரகுரு வெற்றிபெற வாய்ப்பு உள்ளது என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. குமரகுரு தேற்றதால் விரக்தியில் இருந்த அவருடைய ஆதரவாளர்கள் வாட்ஸ்அப் குரூப்ல தோல்விக்கு இவர்தான் காரணம் அவர்தான் காரணம் என்று தங்களுக்கு ஆகாதவர்களை சகட்டு மேனிக்கு தாளிக்க ஆரம்பித்தனர் தனக்கு எம்பி சீட் கிடைக்காத வரக்தியில் இருந்த கிருஷ்ணனையும் வம்பிழுக்க ஆரம்பித்தனர். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒத்துழைத்தார் பானை சின்னத்திற்கு ஓட்டு போட்டார் என்று வதந்தியை தீயாய் பரப்ப, நான் இரட்டை இலைக்கு தான் வேலை செய்தேன், ஓட்டும் போட்டேன் என்று பரிதாபமாக கெஞ்ச ஆரம்பித்தார். உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் துரை கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாங்க மாவட்டம் குமரகுரு வீட்ல போய் பேசி தீர்த்துக்கலாம் என்று கிருஷ்ணனை கூட்டிகிட்டு போய் நிறுத்தினர்.
டென்ஷனான சூழலில் அதிமுகவினர் மத்தியில், குமரகுருவும் கிருஷ்ணனும் பேச, வாக்குவாதம் முற்றியதில் என் வாழ்க்கையை கெடுக்காதே குமரகுருதான் என்று ஆத்திரத்தில் கிருஷ்ணன் சத்தம் போட்டு அழ, கோபத்தில் குமரகுரு பிடித்து தள்ளியதாக உடனிருந்தவர்கள் சொல்லுகிறார்கள் அதன்பிறகு நிஜமான அடிதடியே நடந்தேறிவிட்டது. விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் கிருஷ்ணன். விஷயம் பெரிய பஞ்சாயத்தாகி அதிமுகவினர் மத்தியில் பெரிய பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியிடம் பஞ்சாயத்தை கூட்டி நியாயம் கேட்க கிருஷ்ணன் தரப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது கிருஷ்ணனுக்கு நியாயம் கிடைக்குமா?
– நந்தகோபால்
—
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply