Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மனைவி தலைவர் – கணவர் ஆக்டிங்அதிகாரமும் ஒப்பந்த பணிகளும் எனக்கேதெள்ளார் யூனியன் அடாவடி!

உள்ளாட்சி அமைப்புகளில் பெண் மக்கள் பிரதிநிதிகளின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்தக்கூடாது மீறி ஆதிக்கம் செலுத்தினால், கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் எச்சரித்திருந்தார். ஒப்பந்தப்பணிகள் எடுத்து செய்யக்கூடாது என்பதும விதி இதையெல்லாம் சௌகர்யமாக காற்றில் பறக்கவிட்டுவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் எச்சரிக்கை மற்றும் விதிமீறலை விருப்பமாக கொண்டு செயல்படுகின்றன். பெண் மக்கள் பிரதிநிதிகளின் குடும்பத்தினர் இதில் ஆளுங்கட்சி எதிர்கட்சி என்கிற வேறுபாடெல்லாம கிடையாது. உதாரணத்திற்கு ஆளுங்கட்சி உடன்பிறப்பு ஒருவரின் செயல்பாடுகளை பார்ப்போம்…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தெள்ளார் யூனியன் சேர்மனாக இருப்பவர் கமலாட்சி இவருடைய கணவர் இளங்கோவன் திமுகவில் தெள்ளார் ஒன்றிய செயலாளராகவும் இருக்கிறார். துணை சேர்மன் விஜயலட்சுமி தண்டபாணி பாமகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர், சாப்பிடுவதற்கு தவிர வேறு எதற்கும் வாய் திறக்கமாட்டார் காரணம், முறைவாசல் முறையாக நடப்பதுதான். மற்றபடி கமலாட்சி மன்ற கூட்டங்கள் நடக்கும்போது மட்டும் தெள்ளார் யூனியன் பக்கம் வருவார் மற்றபடி யூனியனுக்கும் கமலாட்சிக்கும் சம்மந்தமில்லை ஆல்இன்ஆல் இளங்கோவன்தான் சேர்மனாக ஆக்டிங் பண்ணுவதில் ஆரம்பித்து, அதிகாரிகளை வேலை வாங்குவதுவரை எல்லாம் இவரே! அப்புறம் முக்கியமான விஷயம் ஒப்பந்தப்பணிகள் எல்லாம் பரமசிவம் இளங்கோவன் பெயரில் இவர்தான் எடுத்து செய்வார் வேற யாராவது காண்ட்ராக்ட் வேலைகள் எடுத்து செய்யனும்னு விருப்பட்டால் இளங்கோவன் பெயரில்தான் எடுத்து செய்ய வேண்டும் தெள்ளார் யூனியனில் இது எழுதப்படாத விதி! வேலை முடிந்த பிறகு பொறுமையாக பில் கிடைக்கும் அல்லது காலதாமதம் ஆகலாம் இழுத்தடிக்கப்படலாம் பாண்டியனின் பதின்மூன்று லட்ச ரூபாய் விவகாரம் போல பல கட்ட பஞ்சாயத்துகளில் தீராமலும் போகலாம் அது சமூக வளைதளங்களில் நாறலாம். இளங்கோவனின் எல்லா அதிகார சேட்டைகளுக்கும் முழு ஒத்துழைப்போடு பக்கபலமாய் இருந்த அம்பேத்கர் எம்எல்ஏவுக்கும் இளங்கோவனுக்கும் சமீபத்தில் முட்டிகிச்சி, காரணம் நாலரை கோடி ரூபாய் பில்டிங் வேலைதான்! பஞ்சாயத்தை மெள்ள தள்ளிகிட்டு போய் அமைச்சர் எ.வ.வேலுவிடம் நிறுத்தி, மாவட்ட செயலாளரும் ஆரணி எம்பியுமான தரணிவேந்தன், அம்பேத்குமார் எம்எல்ஏ இளங்கோவன் உள்ளிட்டோர் ஆஜராகினர். அந்த வேலை அம்பேத்குமார் எடுத்துக்கட்டும் கிளம்புங்கனு தீர்ப்பை சொல்லிட்டார் அமைச்சர் எ.வ.வேலு ஊர் திரும்புவதற்குள் யாருக்கும் தெரியாமல் வேலையை வேறு ஒருவருக்கு முப்பது சதவிதம் கமிஷன் வாங்கிகிட்டு கொடுத்துவிட்டார். விஷயம் தெரியவர இளங்கோவன் கோபமாகிவிட்டார். வேலையை எனக்கு கொடுத்திருக்கலாம். அந்த கமிஷனை நான் கொடுத்திருப்பேனே என்று குமுறி தள்ளிவிட்டார். அவ்வளவுதான் இளங்கோவனுக்கும் அம்பேத்குமாருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகிவிட்டது.
கட்சிக்காரனாக இருந்தாலும் கறாரா கமிஷனை வாங்கிவிடும் இளங்கோவன், யூனியன் அதிகாரிகள் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய முறையில் முறைவாசல் செய்துவிடுவதில் வல்லவர், சீனிவாசன் பிடிஒவும் இஞ்சினியரும் இளங்கோவனின் தப்பாட்டங்களுக்கு மிகுந்த பலம் சேர்ப்பவர்கள், பிஎம்ஒய் திட்டத்தில் பழைய வீடுகளுக்கே சுண்ணாம்பு அடித்து வீட்டு உரிமையாளருக்கு பாதி தனக்கு பாதி என்று ரூட் போட்ட விஷயத்தை விஷ்ணுணுபிரசாத் எம்பி முச்சந்தியில கொண்டுவந்து கொட்டிவிட்டார். தெள்ளார் யூனியனில் உள்ள அறுபத்தி ஒரு பஞ்சாயத்திலும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டி தன்னோட பங்கு, அம்பேத்குமார் எம்எல்ஏ பங்கு, என்ற மூன்றாக்கி விடுவார். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தடுப்பணை (செக் டேம்) கட்ட ஒன்றரை லட்சம் எஸ்டிமேட் ஆனா கூடுதலா எஸ்டிமேட் போட்டு பலனடைந்த விவகாரங்கள் நேர்மையான அகாரி யாராவது வந்து கிளறினால் பெரிய பூதம் கிளம்பும் மேற்படி ஸ்பெஷல் திட்டத்தில சீமா புத்தூர் பஞ்சாயத்தில நிறைய தடுப்பணைகள் கட்டி இருக்கறதா திமுக மீது சத்தியம் பண்றார் ஒரு உடன்பிறப்பு.
அதிரடி ஆசாமியான இளங்கோவன் சாதாரணமாய் பேசும்போதே சண்டை போடுவதுபோல் இருக்கும். இவர் சார்ந்த நல்ல விஷயங்களை விட அதிருப்திகள், தெள்ளார் யூனியனை ஒருவழி பண்ணி வச்சிருக்கு உடன்பிறப்புகளும் வெளியில் சிரிக்கிறாங்க மனதுக்குள் புலம்புறாங்க.
– ஆலவாயர்