மதுரை மாவட்டம்,
மேற்கு யூனியன் தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்து கிராமத்தில்வீடு இல்லாதவர்கள் வீட்டு மனை கேட்டு 266 பேர் கிராம நிர்வாக அலுவலர் மீனா விடம்
மனு செய்திருந்தனர். இதற்கான இடம் ஊராட்சிக்குட்பட்ட கட்டப்புலி நகரில் சுமார் 5 ஏக்கர் அரசு நிலம் உள்ளதாகவும் இதில், இவர்களுக்கு வீட்டுமனை வழங்கு
வதாகவும் இதற்கான உத்தரவை மதுரையில் நாளை நடக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில், அமைச்சரின் கையால் வழங்க இருப்பதாகவும் இவர்களிடம்
ஒரு சிலர் தெரிவித்தனர்.
இதை நினைத்து இவர்கள், இன்று கிராம நிர்வாக அலுவலர் மீனாவிடம் சென்று கேட்ட பொழுது, மனு கொடுத்த பொதுமக்களில் ஒரு சிலருக்கு தான் வீட்டுமனை வழங்கு
வதற்கான உத்தரவு மதுரை வடக்கு தாசில்தார் வழங்கி உள்ளதாக கூறியுள்ளார். இதை கேட்ட வீடு இல்லாதவர்கள் அதிர்ச்சி அடைந்து, இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் மீனா விடம் இன்று காலை நேரில் சென்று வாக்கு
வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு பதட்டம் பரபரப்பு ஏற்பட்டதால் கிராம நிர்வாக அலுவலர் மீனா மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் அலுவலகத்தை பூட்டி சென்று விட்டனர். இதனால்,
வீட்டு மனை கேட்டு மனுசெய்தவர்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பாக உட்கார்ந்து வீட்டு மனை பட்டா கேட்டு கோஷம் போட்டனர். எங்களுக்கு வீட்டுமனை பட்டா
வேண்டும் வீடு இல்லாதவர்களுக்கு, வீடு கொடு எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தை எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட வீடு இல்லாத
வர்களுக்கு, வீட்டுமனை வழங்கு வேறு ஊராட்சியில் உள்ளவர் களுக்கு எங்கள் ஊராட்சியில் உள்ள இடத்தை வழங்காதே என்று கோஷம் எழுப்பினர்.
இது குறித்து, பாண்டி மனைவி கவிதா கூறும் பொழுது, எங்களுக்கு வீடு இல்லை வீடு இல்லாதவர்களுக்கு
வீட்டுமனை பட்டா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கப் போவதாகவும், இதனால், எங்களை போன்ற வீடு இல்லாதவர்களை மனு செய்ய சொன்னார்கள். நாங்களும் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவரும் சுமார்
300 பேர் மனு செய்திருந்தோம். இன்று வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்கக்
கூடிய உத்தரவு அடையாள அட்டை வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலரும் வரச் சொன்னதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், மனு செய்த அனைவரும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு இருந்த கிராம நிர்வாக அலுவலர் மீனா ஒரு சிலருக்கு தான் உங்கள் ஊரில் உள்ளவருக்கு வீட்டுமனை பட்டா வழங்
குவதற்கான உத்தரவு வந்துள்ளது . மீதி உள்ள இடத்தை அடுத்த ஊராட்சியில் உள்ளவர் களுக்கு வழங்குவதற்கான உத்தரவு உள்ளதாக தெரிகிறது என்று கூறியதாக தெரிவித்தார்.
இதே போல், சாந்தி என்பவரும் இந்த வீட்டுமனை வழங்கும் விழாவில் எங்களுக்கு வீட்டுமனை வழங்கப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் .
இதனால், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கேட்ட பொழுது உங்களுக்கு வரவில்லை ஒரு சிலருக்கு மட்டும் தான் வந்திருக்கிறது என்று தெரிவித்தார். எங்கள் ஊராட்சிக்
குட்பட்ட இடம் 5 ஏக்கருக்கு மேல் இருக்கிறது. அரசு நிலம் இதில் எங்களுக்கு வழங்க வேண்டியது
தானே என்று கேட்ட பொழுது, மீதி உள்ள இடத்தை மற்ற ஊராட்சியில் உள்ளவர்களுக்கு கொடுத்ததாக தெரிவிக்கிறார். இதனால் வீடு இல்லாதவர்கள் வீட்டு மனை கேட்டு மனு செய்தவர்கள் வீடு கிடைக்காதால், கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை நடத்துவோம் என்று தெரிவித்தார். இன்று இரவுக்குள்
நல்ல முடிவு ஏற்படவில்லை என்றால், நாங்கள் நான்கு வழிச்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply