செய்யார் லக.. லக..நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க என்கிறதெல்லாம் பழசு நாலு பேரை பற்றி நாலு விதமா பேசறாங்க என்பது புதுசு வாங்க அவங்களைப் பற்றி நாலும் தெரிஞ்சுக்கலாம்…
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று செய்யார் இதற்கு திருவத்திபுரம் என்கிற பெயரும் உண்டு. திமுக ஆட்சிக்கு வந்து மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டது.
ஆரம்பம் முதலே செய்யார் சட்டமன்ற தொகுதியில் முனுமுனுப்புக்கு பஞ்சமில்லை முனுமுனுப்பாளர்கள் திருவாளர் உடன்பிறப்புகள்தான்!
ஆளுங்கட்சி என்பதால் அனைத்து நிர்வாகிகளும் திமுக தொண்டர்கள் கவனப்பார்வையில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது அது சரி நிர்வாகிகளின் செயல்பாடுகள் எப்படி?
செய்யார் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல் கொஞ்சம் ஆக்டீவா இருக்கிறார் வருமானம் பாக்கறதிலே அக்கறையா இருக்கிறார் பரபரப்பு அரசியல்வாதியா தன்னை காட்டிக்கிறார் மற்கு ஒன்றிய செயலாளர் ஜோதி
ஆரணி சட்டமன்ற தொகுதிக்குள் ஜோதிக்கு வீடு என்றாலும், செய்யார் தொகுதி எம்எல்ஏ! விவசாயி, முழுநேர அரசியல் வாதி அதிர்ந்து பேசமாட்டார், சட்டமன்றம் இல்லாத நாட்களில் செய்யார் தொகுதி அலுவலகத்தில் பார்க்கலாம் கட்சிக்காரர்கள் பொதுமக்கள் எளிமையாக சந்திக்கலாம். அரசு அரசியல் கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு என எல்லா நிகழ்ச்சிகளிலும் பார்க்கலாம். நாவல்பாக்கம் பாபு செய்யார் யூனியன் சேர்மன் இவருக்கும் திமுகவிற்கும் ரொம்ப தூரம் வஞ்சனையில்லாம நல்லா சம்பாதிக்கிறார்.
அனக்காவூர் ஒன்றியத்தில் திமுகவில் தொண்டர்களைவிட தலைவர்கள் அதிகம்! கிழக்கு திராவிட முருகனுக்கும் மேற்கு சி.கே.ரவிக்குமாருக்கும் உடன்பிறப்புகள் மத்தியில மரியாதை குறைவுதான், யூனியன் சேர்மன் திலகவதி ராஜ்குமார் பாமகவிலிருந்து வந்தவர், கவுன்சிலர்களின் பற்றாக்குறை பஞ்சாயத்தில மாட்டிகிட்டு முழிக்கிறார் யூனியன்ல வர்ற பெரும்பான்மை வேலைகளை தன்னுடைய அப்பா பெருமாள் பெயரில் எடுத்துச்செய்கிறார், திமுகவினரை கண்டுகொள்வதில்லை. நிறைய சம்பாதித்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டு ராஜ்குமார் மீது இருக்கிறது. வெம்பாக்கம் மேற்கு தினகரன், மத்தியம் ஜம்போடை சீனிவாசன், இதில் சீனிவாசன் ஜாம்பவான் கல்குவாரி முதலாளி, இவருடைய மனைவி பார்வதி திருவண்ணாமலை மாவட்ட சேர்மன், தன்னுடைய செலவினங்கள் கட்சிப்பணிகள் மூலம் ஒன்றுபட்ட திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பேசக்கூடிய நபராக இருக்கிறார். கிழக்கு சங்கர், ஏழாச்சேரி கார்த்திகேயனோடு வலம் வருகிறார் அவ்வளவுதான்! யூனியன் சேர்மன் மாமண்டூர் ராஜி அதிமுகவிலிருந்து வந்தவர் இவரும் குவாரி முதலாளிதான் கொஞ்சம் தாராளமா செலவு பண்ணுவார் கட்சியினர் மத்தியில கொஞ்சம் நல்ல பெயர் இருக்கு மாமண்டூர் ராஜீ அடுத்த கட்ட அரசியல் வளர்ச்சிக்கு அடிபோட்டுக்கொண்டிருக்கிறார்.
செய்யார் நகராட்சி தலைவர் மோகனவேல் நகரத்தில் எந்த வளர்ச்சியும் நடந்திடமா தன்னுடைய அசுர பொருளாதார வளர்ச்சியை மட்டும் கவனமாக பார்த்துக்கொள்கிறார் நகர செயலாளராக இருக்கும் விஸ்வநாதன் கட்சிக்கோ கட்சிக்காரனுக்கோ கடுகளவு உபயோகம்கூட இல்லை சுருக்கமா தத்தினு சொல்லலாம். அடுத்தவர் வெம்பாக்கம் வேல்முருகன் கட்சியில தலைமை செயற்குழு உறுப்பினர் வசதிபடைத்தவர் இவரால் யாருக்கும் உபயோகமில்லை. திமுகவினரை தேடிவேல்முருகன் போறதில்லை, திமுகவினரும் வேல்முருகனை தேடி வர்றதில்லை காலாவதியாய் போன பழைய அரசியல்வாதி! இவருடைய ஒரே குறிக்கோள் காண்ட்ராக்ட் வேலை எடுத்து நிறைய சம்பாதிக்கனும அவ்வளவுதான் சுருக்கமா சொல்லனும்னா வேல்முருகன் தேவையில்லாத ஆணி.
செய்யார் தொகுதி திமுகவினர் நிலவரம் இப்படி இருக்க, இப்போதைய அடையாளங்களாக ஜோதி எம்எல்ஏ, ஜம்போடை ஜெ.கே.சீனுவாசன், மாமண்டூர் ராஜீ, வெம்பாக்கம் வேல்முருகன் உள்ளிட்ட நால்வரையும் பார்க்கிறார்கள். அதிலும் ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், ஓ.ஜோதி, ஜம்போடை ஜெ.கே.சீனுவாசன், மாமண்டூர் ராஜீ மூவரும் ஒரு அணியாக ஒற்றுமை காட்டுகிறார்கள் வெம்பாக்கம் வேல்முருகனை பெருசா கணக்குல எடுத்துக்கறதில்ல, வேல்முருகனும் பெருசா பீல் பண்றதில்ல
இதுதான் செய்யார் தொகுதி திமுகவோட லேட்டஸ்ட் நிலவரம் மேற்படி நான்குபேரை பற்றித்தான் தொகுதிக்குள்ள நாலுவிதமா பேசறாங்க.
– ஆலவாயர்
What’s your reaction?
Love0
Sad0
Happy1
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply