Save 20% off! Join our newsletter and get 20% off right away!

ஆபத்தால் நிலையில் இயங்கும் அரசு பேருந்து:

 மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில், பெரும்பாலான பஸ்கள் ஆபத்தான இயக்கப்படுவதாக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர். சோழவந்தான் அரசு போக்
குவரத்து பணிமனையில், சுமார் 40-க்கும் மேற்பட்ட அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
 இதில், பெரும்பாலான பஸ்கள் பட்டைகள் உடைந்தும், மழைக் காலத்தில் அருவி போல கொட்டும் நிலையில் பஸ்கள் இயக்கப்படுகிறது.
 மதுரை மாட்டுத்தாவணியில், இருந்து சோழவந்தான் வரை இயக்கப்படும் அரசுப் பேருந்து பட்டையில் உடைந்து ஆபத்தான நிலையில் இயக்கப்
படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து, பல தடவை சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அலுவலர்களிடம் புகார் செய்தும்,
அரசு பஸ்களை சீரமைக்க ஆர்வம் காட்டவில்லை என, கூறப்படுகிறது. சோழவந்தான் அரசு டெப்போவிற்கு புதிய பஸ்கள் வழங்க,
 அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி
 மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

– நா.ரவிச்சந்திரன்