மதுரை என்றாலே, கோவில் நகரம் என்பார்கள். அவ்வாறு புனிதமான இந்த நகரத்தில்,
கடந்த சில மாதங்களாக சாலையில் தெருக்களில்
மிகவும் மோசமாக உள்ளது. முதலில், மாநகராட்சி குடிநீர் திட்ட பணிக்காக சாலைகளில் பெரிய பள்ளங்கள் தோன்டப்பட்டு, குழாய்களை பதித்தும், தோண்டிய பள்ளங்களை சரிவர மூடப்படாமல், மழைக்
காலங்களில் மழை நீர் தேங்கும் அளவுக்கு மிகவும் மோசமாக உள்ளது. அத்துடன் சாலைகளில் தோண்டிய பள்ளங்களை, மாநகராட்சி ஒப்பந்
ததாரர்கள் சரியாக மூடாததால், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, சாலைகள் வழியாக பாதசாரிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு, மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இது
குறித்து, இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலக
புகார் செய்தும், தோன்றிய பள்ளங்களை சரிவர மூட உரிய நடவடிக்கை எடுக்கப்
படவில்லை. அத்துடன் சாலைகளில் மழைக்
காலத்தில், கழிவு நீர் வாய்க்கால் இருந்து
கழிவு நீர் பெருக்கெடுத்து, சாலையிலே மழை நீருடன் தேங்குவதால், கொசு தொல்லை ஏற்படுவதுடன், விஷக்
கிருமிகளின் தொல்லை களும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும்,
பாதாள சாக்கடை பல இடங்களில் போடப்பட்டு, அதன் மேல் போடப்பட்ட மூடிகள் சரியாக மூடப்
படாததால், இரவு நேரங்களில் அப்பகுதியாக செல்ல பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இதுகுறித்து, மதுரை மாநகராட்சி மேயர், உதவி ஆணையர், வார்டு கவுன்சி
களிடரிடம், அப் பகுதி மக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்
துள்ள உள்ளனர். ஆகவே, மதுரை மாநகராட்சி நிர்வாகமானது, சாலையில் தோண்டப்
பட்டுள்ள பள்ளங்களை சரிவர மூடி, தார்ச் சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை அண்ணா நகர், தாசில்தார்நகர், சித்தி விநாயகர் தெரு,
மருது பாண்டியர் தெரு, கோமதிபுரம் ஆறாவது மெயின் ரோடு, வீரவாஞ்சி தெரு, அன்பு மலர் தெரு, யாகப்ப நகர் எம்.ஜி.ஆர் தெரு ஆகிய தெருக்களில் பாதாள சாக்கடை
பல இடங்களில் அடைப்புகள் உள்ளதாகவும், இதனால் மழைக்காலங்களில் வீடுகளில் கழிவுநீர் தேங்குகிறது.
ஆகவே, மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை அடைப்புகளை சீர் செய்தும், திறந்தவெளி உள்ள கழிவுநீர் வாய்க் காலில் உள்ள பாலித்தீன் குப்பைகளை அகற்றியும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply