மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் சினிமா நடிகர் சூரி , உணவகம் செயல்பட்டு வருகிறது. பொதுப் பணி துறை ஒப்பந்தம் மூலம் கடந்த 24-06-2022 ஆம் ஆண்டு தொடங்கப்
பட்ட இந்த உணவகத்தை, தமிழகத்தின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்.
இந்த உணவகம் ஒப்பந்தம் அடிப்படையில் செயல் படுவதற்கு பொதுப்
பணி துறையினரால் உணவகம் செயல்பட 434 சதுரடி பரப்பு மட்டுமே அனுமதி வழங்க பட்டுள்ளது. ஆனால்,
இந்த அம்மன் உணவக நிர்வாகத்தினர் மருத்துவமனை செவிலியர் விடுதியில் வரிசையாக கழிவு நீர் தொட்டிகள் அமைந்துள்ள இடத்தில் நிர்ணயிக்க
பட்ட அளவிற்கும் கூடுதலாக விதிமுறைகளை மீறி 350 சதுரடிக்கு நிரந்தரமாக ஷெட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தும், 360 திறந்தவெளி ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர். இங்கு அமைந்துள்ள பத்திற்கும் மேற்பட்ட கழிவு நீர் தேங்கும் செப்டிக் டேங்க்க்குகளின் நடுவேதான் காய்கறிகள் வெட்டுதல், உணவு சமைத்தல், உணவு பொருட்களை பாக்கெட் போட்டு பேக்கிங் செய்தல் போன்ற பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. மேலும்,
தீவிர தொற்று நோயை உண்டாக்கும் எலிகள், பெருச்சாலிகள், கரப்பான் பூச்சிகள் பல்லாயிரக் கணக்கில் வசிக்கும் இடமாக அந்த இடம் அமைந்
துள்ளது. செவிலியர் விடுதிக்கு காற்றோட்டம் சூரிய ஒளி வரும் விதமாக திட்டமிட்டு அமைக்கப்
பட்ட ஜன்னல்கள் முழுவதையும் மறைத்து இந்த உணவக உரி
மையாளர்கள் மினரல்
வாட்டர்
கேன்கள் நிறைந்த
அட்டை பெட்டிகளை அடுக்கி வைத்
திருப்பதால், அங்கு தங்கியிருக்கும் செவிலியர்கள் மற்றும் செவிலிய ஆசிரியைகள் சூரிய ஒளி, காற்றோட்டம் வரும் வகையில்
ஜன்னலை திறக்க முடியாமல், எப்பொழுதும் மூடியே வைத்
துள்ளனர். இதனால், அவர்களுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்படுகிறது. இந்த அம்மன் உணவகத்தின் வெகு அருகில்தான் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவும், பிரசவ வார்டும் உள்ளது. இவ்வாறு
கழிவு நீர் தொட்டிகளின் நடுவிலும், பெருச்
சாலிகள், கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்திலும் சுகாதார
மில்லாமலும், தரமற்ற வகையிலும் தயாரித்து சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் ஏற்படும் நோய் தொற்றின் தீவிரம் பற்றி தெரியாமலேயே தினமும் ஏராளமான குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் உடன் தங்கியி
ருப்பவர்கள் இந்த உணவு வகைகளை வாங்கி உண்டு வருகிறார்கள். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்படி ஏற்கனவே, உதவி நிலைய மருத்துவ அலுவலரிடம் தெரிவித்
தேன். ஏதோ அவர்களிடமிருந்து அவர் அனுதினமும் பிரதிபலன் பெற்று வருவது போல் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அந்த ஆக்கிரமிப்பு ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஆதரவாகவே பேசினார். மேலும் ,
அவர் இந்த விஷயத்தை மருத்துவமனை முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்லாமல் வேண்டு
மென்றே ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் வகையில் மறைத்துள்ளார். ஆகவே, இவ்வாறு
சட்ட முரணாக பொதுப் பணி துறையின் ஒப்பந்த முறைகளை
மீறி முழு ஆக்கிரமிப்பு செய்தும், சுகாதாரமற்ற முறையிலும் தரமற்ற வகையில் உணவுகளை தயாரித்து கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் மேற்கண்ட உணவகத்தில் நேர்மையான அதிகாரிகளை நியமித்து ஆய்வு செய்து சீல் வைத்து நடவடிக்கை எடுக்க பொதுநலன் கருதி கேட்டு கொள்வதாக கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் சங்கீதா உரிய நடவடிக்கைக்
காக சுகாதார துறை துணை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.
கழிவுநீர் தொட்டிகள் மீது சமையல் அறை…நோய்தொற்று ஏற்படும் அபாயம்?நடிகர் சூரி உணவகம் மீது புகார்

filter: null; fileterIntensity: null; filterMask: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: remosaic;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 86.287766;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;